Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஷ்மீர் தாக்குதல்.. பாகிஸ்தான் சேனல் வரை சென்ற சித்தராமையா.. அப்படி என்ன சொன்னார்? கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் என்பது அதிகரித்து வருகிறது. இதற்கிடையே தான் இந்தியாவுக்கு என்று தனியாக ஆயுதக்கிடங்கை வைத்துள்ளோம். அதில் ஏவுகணைகள், அணுஆயுதங்கள் உள்ளது. இந்தியாவை நோக்கி மட்டும் 130 அணுஆயுதங்களை வைத்துள்ளோம் என்று மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் இருநாடுகள் இடையேயான பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் அருகே பைசரன் என்ற புல்மேடு உள்ளது. இங்கு கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிசூடு நடத்தினர். 22 சுற்றுலா பயணிகளை கொன்றனர். இதில் 12 பேர் காயமடைந்தனர்கள். இந்த தாக்குலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' மேற்கொண்டுள்ளது.

pakistan-media-playing-up-siddaramaiah-words-we-are-not-favour-of-war

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நம் நாடும் தயாராகி வருகிறது. விரைவில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நம் நாட்டின் படை வீரர்கள் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வர் சித்தராமையா நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பாகிஸ்தானுடன் போருக்கு செல்ல வேண்டாம் என்று கூறினார். இதுபற்றி சித்தராமையா கூறியதாவது: பிரதமர் மோடி டெல்லியில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று இருக்க வேண்டும். ஆனால் அவர் பீகார் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். இது என்ன மாதிரியான செயல்? அவர் மக்களை ஏமாற்றுகிறார்.

நாடு முழுவதும் அமைதி என்பது வேண்டும். மக்களை பாதுகாக்க பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். தற்போதைய தாக்குதலில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது. நாங்கள் போருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. போர் என்பது இப்போது தேவையில்லை. இந்த தாக்குதல் என்பது உளவுத்துறை தோல்வி மற்றும் பாதுகாப்பு குறைபாட்டால் நடந்துள்ளது. காஷ்மீர் பிராந்தியத்தில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். பாகிஸ்தானியர்கைள வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

சித்தராமையாவின் இந்த பேட்டியை பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு வருகின்றன. இதற்கிடையே தான் பாஜக தலைவர்கள் சித்தராமையாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. டெல்லியில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி மத்திய அரசின் முடிவுக்கு கட்டுப்படுவதாக தெரிவித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கிறார் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதுபற்றி கர்நாடகாவின் எதிர்க்கட்சி தலைவர் (பாஜக) ஆர் அசோக் கூறுகையில், ‛‛அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் தலைவர்கள் பங்கேற்றனர். காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளனர். நமது நாட்டின் திறமையான வீரர்கள் உள்ளன. எந்த சூழலிலும் தாக்குதலை நடத்தும் திறமை கொண்டவர்களாக உள்ளனர். அவர்களுக்கு உங்களின் அறிவுரை என்பது தேவையில்லை. அவர்களுக்கு அறிவுரை கூறும் தகுதி உங்களுக்கு இல்லை.

மாநிலத்தில் வங்கதேசத்தில் இருந்து ரோஹிங்கியா மக்கள், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் ராஜாக்கள் போல் உலா வருகின்றனர். முதலில் அவர்களை அடையாளம் கண்டு நாடு கடத்த வேண்டும். கன்னட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தேவையின்றி நாட்டின் நலன் சார்ந்த விஷயங்களில் மூக்கைநுழைக்க வேண்டாம்'' என்று சித்தராமையாவை கடுமையாக தாக்கி உள்ளார்.

அதேபோல் சித்தராமையாவின் இந்த கருத்து பற்றி கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமாரிடம் இன்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛நாங்கள் நாட்டை ஒன்றாக வைக்க விரும்புகிறோம். முதல்வர் கூறியது பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. இந்தியா என்பது பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான நிலைப்பாட்டை எனது கட்சி (காங்கிரஸ்) எடுத்துள்ளது’’ என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+