இப்போ மட்டும் வரீங்களா.. அசிங்கமா இல்லையா? பாஜக "டாப்" எம்எல்ஏவை விரட்டிய மக்கள்.. பெங்களூரில் ஷாக்
பெங்களூர்: பெங்களூர் ராஜாஜி நகர் தொகுதி பாஜக மூத்த எம்எல்ஏ சுரேஷ் குமாரை மக்கள் விரட்டி அடித்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவிற்கு தொட்டதெல்லாம் சறுக்கலாக மாறிக்கொண்டு இருக்கிறது. அங்கே பாஜகவின் ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு நிலவுவதாக கணிப்புகள் தெரிவித்த காரணத்தால் பிரதமர் மோடி கடந்த 3 நாட்களாக பிரச்சாரம் செய்தார்.
மாநில அரசுக்கு தானே மவுஸ் குறைந்துவிட்டது.. எனக்கு இல்லையே.. என்று கூறி வாக்காளர்களை கவரும் விதமாக பெங்களூர் தொடங்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். இதில் பெங்களூரில் அவர் செய்த பிரச்சாரம் அவருக்கே எதிராக திரும்பியது.

நேற்று முதல்நாள் அங்கே காலையில் இருந்து அவர் செய்த ரோட் ஷோ பிரச்சாரம் காரணமாக பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். சாலையில் செல்ல முடியாமல் கடுமையாக சிரமப்பட்டனர். பல்வேறு சாலைகள் மூடப்பட்டதால் மக்கள் கடைக்கோ, வேலைக்கோ, அலுவலகங்களுக்கோ செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
கடைசியில் பொதுமக்கள் பலரும் பிரதமர் மோடியை இதனால் விமர்சனம் செய்யும் நிலை ஏற்பட்டது. அங்கே பேட்டி எடுக்கப்பட்ட பல பொதுமக்கள் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரச்சாரம் இறுதிக்கட்டம்: கர்நாடகாவில் இன்றோடு பிரச்சாரம் முடிய உள்ளது. நாளை மறுநாள் தேர்தல் நடக்க உள்ளதால் இன்று மாலையோடு பிரச்சாரம் முடிய உள்ளது. இந்த நிலையில்தான் பெங்களூர் ராஜாஜி நகர் தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேஷ் குமாரை மக்கள் விரட்டி அடித்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜாஜிநகர் தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு சென்ற சுரேஷ் குமார் அங்கே பொதுமக்களால் விரட்டப்பட்டு உள்ளார். ராஜாஜி நகர் தொகுதிக்கு சுரேஷ் குமார் எதுவும் செய்யவில்லை, கொரோனா டைமில் அரிசியை சரியாக வினியோகம் செய்யவில்லை. இப்போ ஓட்டு கேட்டு வர அசிங்கமாக இல்லையா என மக்கள் அவரை கேட்டு விரட்டி அடித்து உள்ளனர்.
அந்த தொகுதியில் கடந்த 2008ல் இருந்து வரிசையாக 3 முறை சுரேஷ் குமார்தான் வென்றார். நான்காவது முறையாக அவருக்கு அங்கே போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த முறை அவர் வெற்றிபெற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
2004ல் இங்கே நரேந்திர பாபு என்பவர் காங்கிரஸ் சார்பாக வென்றார்.அதற்கு பின் இங்கே மீண்டும் காங்கிரஸ் வெல்வதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. இந்த நிலையில்தான் ராஜாஜிநகர் தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு சென்ற சுரேஷ் குமார் அங்கே பொதுமக்களால் விரட்டப்பட்டு உள்ளார்.
அடிப்படை தேவைகளை நிறைவேற்றவில்லை, தண்ணீர் பிரச்னையை தீர்க்கவில்லை, சாலைகளை சரியாக போடவில்லை என்பது போன்ற புகார்கள் இவர் மீது வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில்தான் பிரச்சாரம் செய்ய அவரை.. நீங்க எதுவுமே செய்யவில்லை. எங்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கூறி விரட்டி உள்ளார்கள்.

கடந்த தேர்தலில் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற இவருக்கு எதிராக இந்த முறை மக்களே இப்படி எதிர்ப்பு தெரிவிப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்மாநில சட்டசத்துறை அமைச்சர், தொழிலாளர் துறை அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இவர் இருந்துள்ளார்.
கடந்த 20 ஆகஸ்ட் 2019 - 28 ஜூலை 2021 காலகட்டத்தில் எடியூரப்பா அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராகவும் இவர் பதவி வகித்து வந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து வளர்ந்து வந்த மூத்த தலைவரான இவரை ராஜாஜிநகர் தொகுதி மக்கள் விரட்டி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. அங்கு மே 10ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.
தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ராகுல் வரலைன்னா.. பெரிய சிக்கலாகிடும்.. டெல்லியில் பதறிய தமிழக காங்கிரஸ் தலைகள்! என்னாச்சு? -
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
உண்மையான காங்கிரஸ் விஜய் பக்கமா.. அப்போ போலியான காங்கிரஸ் யார்? ப.சிதம்பரம் பதில்! -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications