ரகசிய நிச்சயதார்த்தம்? நடிகை ரம்யாவுக்கு தொழிலதிபருடன் திருமணம்? வெளியான முக்கிய தகவல்
பெங்களூர்: நடிகர் சிம்புவுடன் ‛குத்து', நடிகர் தனுஷுடன் ‛பொல்லாதவன்' உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியான இவர் தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. மேலும் நிச்சயத்தார்த்தமும் ரகசியமாக நடந்து விட்டதாகவும், அடுத்த மாதம் திருமணமும் நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில் அதுபற்றி நடிகை ரம்யா முக்கிய விளக்கமளித்துள்ளார்.
தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா. தமிழ் சினிமாவை பொறுத்தவரை இவர் நடிகர் சிம்புவுடன் ‛குத்து' திரைப்படத்தில் நடித்தார். நடிகர் அர்ஜூனுடன் ‛கிரி', நடிகர் தனுஷுடன் ‛பொல்லாதவன்', நடிகர் சூர்யாவுடன் ‛வாரணம் ஆயிரம்' உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா.

இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வரும் நடிகை ரம்யா ‛காவிரி' ஆற்றுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ள கேஆர்எஸ் அணை (கிருஷ்ணராஜ சாகர் அணை) அமைந்துள்ள மண்டியா லோக்சபா தொகுதியின் முன்னாள் எம்பியாவார். அதேபோல் காங்கிரஸ் கட்சியில் சமூக வலைதள பிரிவின் தேசிய தலைவராகவும் இவர் செயல்பட்டார்.
தற்போது நடிகை ரம்யா தீவிர அரசியலில் இருந்து சற்று விலகி உள்ளார். அதேபோல் சினிமாவை எடுத்து கொண்டால் கன்னட திரைப்படங்களில் மட்டும் அவ்வப்போது நடித்து வருகிறார். நடிகை ரம்யாவுக்கு தற்போது 41 வயது ஆகிறது. அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
இந்நிலையில் தான் நடிகை ரம்யாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகை ரம்யா டெக்ஸ்டைல் துறையில் தொழிலதிபராக உள்ளவரை திருமணம் செய்ய உள்ளார். அந்த தொழிலதிபருடன் நடிகை ரம்யாவுக்கு ரகசியமாக நிச்சயத்தார்த்தம் நடந்து விட்டதாக தகவல்கள் பரவின. இதுபற்றி கன்னட செய்தி சேனல்களில் செய்திகள் வெளியானது.
இதுபற்றி ரம்யாவின் ஆதரவாளர்கள் ‛‛நடிகை ரம்யாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை. அடுத்த மாதம் (அக்டோபர்) நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. அதன்பிறகு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவித்ததாக கன்னட செய்தி சேனல்களில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் தான் தற்போது ஆதரவாளர்கள் கூறியதாக வெளியான நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் தொடர்பான தகவலை நடிகை ரம்யா முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும் அவர் தற்போது பரவி வரும் தகவலால் நடிகை ரம்யா டென்ஷன் ஆகியுள்ளார். அதேவேளையில் அவர் திருமணம் செய்யப்போவதாக பரவி வரும் தகவலை வதந்தி என கூறியுள்ளார். இதுதொடர்பாக நடிகை ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார்.
அதில், ‛‛மீடியாக்களின் செய்திகளின் படி நான் பலமுறை திருமணம் செய்து கொண்டுள்ளனே். எனது திருமணம் தொடர்பாக எண்ணிக்கையை என்னால் நினைவில் வைத்து கொள்ள முடியவில்லை. நான் திருமணம் செய்து கொண்டால் அதுபற்றிய அறிவிப்புகளை நானே வெளியிடுவேன். தயவு செய்து தவறான ஆதாரங்களின் அடிப்படையில் இருந்து கிடைக்கும் செய்திகளை வைத்து வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்'' என தெரிவித்துள்ளார். இதன்மூலம் தற்போது நடிகை ரம்யாவின் திருமணம் தொடர்பாக பரவி வரும் தகவல் வதந்தி என்பது உறுதியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications