உங்க பெயர் சோம்நாத்.. சந்திரயான் வெற்றி.. மகிழ்ச்சியில் திளைக்கிறேன்.. மனம் திறந்து பாராட்டிய மோடி
பெங்களூரு: உங்கள் பெயர் சோம்நாத்.. உங்கள் பெயரைப்போலவே உங்கள் தலைமையிலான விஞ்ஞானிகள் சந்திரயான் 3 வெற்றியை பதிவு செய்துள்ளது என்று இஸ்ரோ தலைவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ளார் பிரதமர் மோடி. மகிழ்ச்சியில் திளைப்பதாக கூறியுள்ள மோடி விஞ்ஞானிகளை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 - விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி துல்லியமாக தரையிறங்கியது. இதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனை படைத்துள்ளது.

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் தரையிறங்கியதை நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்திய விஞ்ஞானிகளின் கடும் உழைப்பை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
பிரிக்ஸ் மாநாட்டிற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர், இந்த நிகழ்வின் நேரலையில் கலந்து கொண்டார். சந்திரயான் - 3 தரையிறக்கப்பட்டது அறிந்து கையில் வைத்திருந்த இந்திய தேசியக் கொடியை அசைத்து பிரதமர் மோடி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, "வரலாற்று சிறப்புமிக்க மகத்தான தருணம் இது. இந்தியர்களின் வாழ்த்து ஓங்கி ஒலிக்கும் நேரம். இது 140 கோடி இந்தியர்களின் இதயங்களின் மனவலிமைக்கான தருணம். இந்த வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் சொந்தமானது என்றார்.
'இந்தியாவின் வருங்கால வளர்ச்சியின் உதயமாக இச்சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. சந்திரயான் - 3 திட்டத்தில் ஈடுபட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் என்னுடைய பாராட்டு. இந்தியா தற்பொழுது நிலவில் உள்ளது. சந்திரயான் - 3 வெற்றிக்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்து. தென் துருவத்தை அடைந்ததன் மூலம் யாரும் அடையாத வெற்றியை இந்தியா அடைந்திருக்கிறது. நிலா... நிலா... ஓடி வா... பாடலை மெய்ப்பித்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டு. வெற்றிக்கு உழைத்த விஞ்ஞானிகளுக்கு கோடான கோடி நன்றி என்று தெரிவித்தார் பிரதமர் மோடி.
WATCH : Immediately After The Success Of #Chandrayaan3, PM @narendramodi Telephoned ISRO Chief S Somanath And Congratulated Him. 😍🇮🇳 #IndiaOnTheMoon #VikramLander #ProudMoment pic.twitter.com/iEWyN1xjTi
— Narendra Modi fan (@narendramodi177) August 23, 2023
இதனையடுத்து தொலைபேசி மூலம் இஸ்ரோ தலைவர் சோம்நாத் உடன் உரையாடினார் பிரதமர் மோடி. இஸ்ரோ தலைவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, விஞ்ஞானி சோம்நாத் அவர்களே.. உங்களுடைய பெயர் சோம்நாத்.. சோம்நாத் என்றால் சந்திரன். உங்கள் தலைமையிலான விஞ்ஞானிகள் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளனர். நான் ஆனந்தமாக இருக்கிறேன். மகிழ்ச்சியில் திளைக்கிறேன். உங்களுடைய தலைமையிலான விஞ்ஞானிகளுக்கு நாம் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பாராட்டியுள்ளார். பிரதமர் மோடியின் பாராட்டுக்களை கேட்ட இஸ்ரோ தலைவர் சோம்நாத் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications