விஷப் பாம்பு போன்றவர் மோடி.. நக்கினால் சாவுதான்! கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் கார்கே கடும் ஆவேசம்
பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடி விஷப்பாம்பை போன்றவர் என்றும், விஷப்பாம்பு நக்கியவர்கள் இறந்துவிடுவார்கள் எனவும் கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடகா மாநிலம் கலபுர்கியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு உரையாற்றினார். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி மீதும், பாஜக அரசு மீது காட்டமான விமர்சனத்தை முன்வைத்தார்.

அவர் ஆற்றிய உரையில், "பிரதமர் நரேந்திர மோடி விஷப் பாம்பை போன்றவர். அது பொதுமக்களை நக்கினால் அவர்கள் இறந்துவிடுவார்கள்." என்று கூறினார். மல்லிகார்ஜுன கார்கேயின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜுன கார்கேவிடம் அதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் தனது பேச்சு குறித்து விளக்கம் கொடுத்து உள்ளார்.
அதில், "நான் பிரதமர் நரேந்திர மோடியை மட்டும் குறிப்பிட்டு அப்படி சொல்லவில்லை. எனது கருத்து மொத்த பாஜகவுக்கு பொருந்தும். பாஜகவின் கொள்கை என்பது விஷப் பாம்பை போன்றது என்றே நான் சொல்ல வந்தேன். அந்த கொள்கையை தொட முயன்றால் மரணம் நிச்சயம்." என்றார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் சொந்த மாநிலமான கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் தேதி நெருங்கி வருகிறது.
வரும் மே 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் ஆளும் பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.
மறுபக்கம் பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் பிரச்சாரங்கள் கர்நாடகாவில் சூடுபிடித்து இருக்கும் நிலையில், சர்ச்சைக்குரிய கருத்துக்களும் அதில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் அம்மாநில தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
"கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கலவரங்கள் வெடிக்கும்" என்று அமித்ஷா சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக புகாரளிக்கவும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்து உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் கட்சியின் வாரண்டி முடிவடைந்துவிட்டது என்று பேசியதற்கு அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு பரபரப்பை பற்ற வைத்து இருக்கிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications