டபுள் என்ஜின்.. கர்நாடகாவில் பாஜக வரலாற்று வெற்றியைப் பெறும்.. தொண்டர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி!
பெங்களூர் : "மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருந்தால் தான் டபுள் என்ஜின் அரசாக செயல்பட்டு விரைவான வளர்ச்சியை எட்ட முடியும். மத்திய அரசிடம் சண்டை போட்டுக்கொண்டு, திட்டங்களை செயல்படுத்தாத அரசு கர்நாடகாவில் அமைந்தால், அந்த மாநிலம் எப்படி செயல்படும்?" என கர்நாடக பாஜக தொண்டர்களுடன் காணொளிக் காட்சி வாயிலாகப் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அரசியல் அரங்கில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. தென்னிந்தியாவை பொறுத்தவரை பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.

கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சி தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தலுக்கு முன்னதாக பல பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி.
கர்நாடகா தேர்தல் : கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி. வரும் மே 8ஆம் தேதி வரை, அவர் பிரச்சாரம் செய்ய உள்ளார். பாஜக தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மே 4ஆம் தேதி உடுப்பி வருகிறார். பிரதமரின் வருகையையொட்டி பிரமாண்ட ஏற்பாடுகளுடன் பாஜக தயாராகி வருகிறது.

பிரதமர் மோடி மட்டுமின்றி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரையும் நட்சத்திர பிரச்சாரகர்களாக பாஜக களம் இறக்கியுள்ளது. வரும் மே 8ஆம் தேதி வரை கர்நாடகா தேர்தல் பிரச்சாரக் களத்தில் அனல் பறக்கப் போகிறது.
பிரதமர் மோடி உரை : கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு எதிரான அலை, ஊழல் குற்றச்சாட்டுகள், சீட் மறுக்கப்பட்ட தலைவர்களின் அதிருப்தி போன்றவற்றால் கர்நாடகத்தில் ஆட்சியைத் தக்கவைக்க பாஜக, பிரதமர் மோடியையே அக்கட்சி பெரிதும் நம்புகிறது. இந்நிலையில், பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி இன்று இணையவழியில் உரையாடினார்.
இன்று கர்நாடக மாநில பாஜக தொண்டர்களுடன் இணையவழியில் உரையாடினார் பிரதமர் மோடி. கர்நாடகாவில் 1,680 இடங்களில் 58,112 வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் சுமார் 50 லட்சம் பாஜக தொண்டர்களுடன் மோடி உரையாடியுள்ளார். பாஜக தொண்டர்களின் சில கேள்விகளுக்கும் பிரதமர் மோடி பதிலளிக்கிறார்.
வரலாற்று வெற்றி பெறும் : தொண்டர்கள் மத்தியில் காணொளிக் காட்சி வாயிலாகப் பேசிய பிரதமர் மோடி, "கர்நாடகா மக்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அம்மாநிலத்தில் பிரசாரம் செய்த பாஜக தலைவர்கள், அங்குள்ள மக்களிடம் மிகுந்த பாசத்தைப் பெற்றதாகக் கூறினர். கர்நாடகாவில் விரைவில் பிரசாரம் செய்ய வருகிறேன். கர்நாடகாவில் பாஜக வரலாற்று வெற்றியைப் பெறும். கர்நாடகாவில் பாஜக பெரும்பான்மை பலம் பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும்.
கர்நாடகாவுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நான் ஒரு காரியகர்த்தாவாக கர்நாடகாவுக்குச் சென்றபோது, மக்கள் என் மீது அன்பையும் ஆசீர்வாதத்தையும் பொழிந்தனர். கர்நாடகாவின் வளர்ச்சிக்கு பங்களித்த பலர் உள்ளனர். மன் கி பாத்தில் கர்நாடக மக்களின் பங்களிப்பைப் பற்றி நான் நிறைய பேசியிருக்கிறேன்.
டபுள் என்ஜின் அரசு : டபுள் என்ஜின் அரசு என்பது விரைவான வேகத்தில் நாட்டின் வளர்ச்சியைக் குறிக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் நாம் ஆட்சியில் இருந்தால் தான் சிறப்பாகச் செயல்பட முடியும். மத்திய அரசிடம் சண்டை போட்டுக்கொண்டு, திட்டங்களை செயல்படுத்தாத அரசு கர்நாடகாவில் அமைந்தால், அந்த மாநிலம் எப்படி செயல்படும்?

ஒவ்வொரு பூத்திலும் வெற்றி என்பதே தேர்தலில் நம் வெற்றியை உறுதி செய்கிறது. வாக்குச்சாவடியில் வெற்றிபெற வேண்டும் என்ற உங்கள் மனப்பான்மையே தேர்தலில் கட்சிக்கு வெற்றியைத் தேடித்தரும்" என்று கர்நாடக பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications