பிளஸ் டூ-வில் ஃபெயில்.. கேலி செய்த ஊரை வாயடைக்க வைத்த இளைஞர்..யுபிஎஸ்சியில் வென்று சாதனை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் 11, 12 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த இளைஞர் ஒருவர் தற்போது யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். கல்வி மட்டுமே நம்மை எந்த உயரத்திற்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லும் என்பதை உணர்ந்து சாதித்து காட்டியுள்ளார் சந்தப்பா குருபரா என்பவர்.

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள கெனிகேஹால் கிராமத்தை சேர்ந்தவர் சந்தப்பா குருபரா. யுபிஎஸ்சி தேர்வில் 644-வது ரேங்க் எடுத்து சாதித்து இருக்கிறார் சந்தப்பா குருபரா. கல்வி மட்டுமே நம்மை எந்த உயரத்திற்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லும்.. ஆரம்ப காலங்களில் எப்படி படித்தாலும் சரி.. விடா முயற்சியால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிஜ வாழ்க்கையில் சாதித்து காட்டியிருக்கிறார் சந்தப்பா குருபரா..

Police SI who excelled in the UPSC exam despite failing in class 12

விவசாய குடும்பம்: அண்மையில் வெளியான '12th Fail' படத்தை நினைவுப்படுத்தும் அளவுக்கு இவரது சாதனை அமைந்து இருக்கிறது. பள்ளி காலங்களில் அனைத்து பாடங்களிலும் பாஸ் ஆக கூட தடுமாறிய சந்தப்பா குருபரா யுபிஎஸ்சி தேர்வில் சாதித்து எப்படி என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் குருபரா. ஒரு வயது இருக்கும் போதே குருபராவின் தந்தை இறந்து விட்டார். இதனால், மிகவும் கஷ்டப்பட்டு குருபராவை அவரது தாயார் வளர்த்துள்ளார். எளிய பின்னணியை கொண்ட குருபரா படிப்பிலும் சுமார்தான். 11 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடையவில்லை. ஆனாலும் அப்போது நடத்தப்பட்ட துணை தேர்வில் பாஸ் ஆகி 12 வகுப்பு வந்துவிட்டார்.

12 ஆம் வகுப்பில் பெயில்: 12 ஆம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்விலும் குருபராவிற்கு தோல்வியே கிட்டியது. இதனால், வாழ்க்கையே வீணாகி போய்விட்டது என நினைத்து வேதனையில் இருந்துள்ளார். குருபராவின் ஊரை சேர்ந்தவர்களும் அவரை பற்றி ஏளனமாக பேசியிருக்கிறார்கள். இதனால், கடும் வேதனை அடைந்த குருபரா, எப்படியாவது சாதித்து காட்ட வேண்டும் என்று நினைத்து இருக்கிறார்.

கல்வியே நம்மை உயரத்திற்கு எடுத்து செல்லும் என நினைத்த குருபரா, ஒரு ஆண்டு முழுமையாக படித்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். வெறும் 39 சதவிகித மதிப்பெண்கள் மட்டுமே எடுத்து இருந்தார். பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மார்க் எடுக்காவிட்டாலும் அவர் சமூக பணிகளிலும் ஆர்வமாக இருந்துள்ளார்.

சிவில் சர்வீஸ் தேர்வு: முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்டோரை தனது இன்ஷ்பிரஷேனாக எடுத்துக் கொண்ட குருபரா, சமூகத்தில் கடை நிலையில் உள்ளவர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்பதை லட்சியமாக எடுத்துள்ளார். சிவில் சர்வீஸ் மூலமே இதை சாத்தியப்படுத்த முடியும் என்று நினைத்த குருபரா, இதற்காக யுபிஎஸ்சி தேர்வுக்கு படிக்க ஆரம்பித்தார். 2014 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக யுபிஎஸ்சி தேர்வு எழுதிய குருபராவிற்கு அடுத்தடுத்து தோல்வியே கிடைத்தது.

இது தான் லட்சியம்: ஆனாலும் தனது ஐஏஎஸ் கனவை விடும் எண்ணம் அவருக்கு விடவில்லை. இரண்டு முறை ஐஏஎஸ் தேர்வில் நேர்முகத்தேர்வு வரை சென்று தோல்வி அடைந்தார். அதேபோல், கர்நாடக மாநில அரசு நிர்வாக பணிக்காக நடத்தப்படும் கேஏஎஸ் தேர்விலும் 3 முறை நேர்முகத்தேர்வு வரை செலக்ட் ஆனார். இதற்கு மத்தியில் எஸ் ஐ தேர்வு எழுதினார். அதில், தேர்ச்சி பெற்றதால் எஸ் ஐ வேலைக்கு சேர்ந்தார்.

எஸ்ஐ வேலையில் இருந்தாலும் தொடர்ந்து யுபிஎஸ்சி தேர்வுக்கு படிப்பதை கைவிடவில்லை. வேலையில் இருந்து கொண்டே யுபிஎஸ்சிக்கு தயாராகி வந்த குருபரா கடந்த ஆண்டு நடத்தப்பட்ட யுபிஎஸ்சி தேர்வில் வென்று சாதித்துள்ளார். சமூக நீதி மற்றும் சமூகத்தில் சமத்துவத்தை கொண்டு வருவதே தனது லட்சியம் என்று சொல்லியிருக்கும் குருபரா, யுபிஎஸ்சியில் இன்னும் சிறந்த ரேங்க் பெறுவதற்காக 9-வது முறையாக முயற்சிக்க இருப்பதாக சொல்லியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+