விரைவிலேயே அரசியல் குழப்பம்! கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்தா? கணித்த மடாதிபதி! பரபர தகவல்
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் நிலையில் அரசியலில் குழப்பங்கள் ஏற்படும் என அம்மாநிலத்தை சேர்ந்த மடாதிபதி ஸ்ரீசிவானந்த் சிவயோகி ராஜேந்திரா மகாசுவாமி கணித்து பகீர் கிளப்பி உள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆபத்து ஏற்படுமா? என்பதற்கு அவர் பரபரப்பான விளக்கத்தையும் அளித்துள்ளார்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்தது. கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது.

மாறாக பாஜக கட்சி 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்தது. இதுதவிர ஜேடிஎஸ் கட்சி 18 இடங்களிலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர். தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான டிகே சிவக்குமாரும் உள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தவுடன் முதல்வர் பதவிக்கு சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. சித்தராமையா ஜேடிஎஸ் கட்சியில் இருந்து வந்தவர் எனவும் அவர் ஏற்கனவே 5 ஆண்டு முதல்வராக இருந்துவிட்டார். இதனால் தனக்கு முதல்வர் பதவியை கொடுக்க வேண்டும். ஏனென்றால் ஜேடிஎஸ் கட்சியின் ஓட்டு வங்கியான ஒக்கலிகர் சமுதாயத்தினரின் வாக்குகளை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெற்று கொடுத்துள்ளேன் என டிகே சிவக்குமார் கூறினார்.
அதேபோல் சித்தராமையாவும் தனக்கு இது கடைசி தேர்தல். எஸ்டி, எஸ்டி, பிற்படுத்தப்பட்ட மக்களின் செல்வாக்கு தனக்கு அதிகம் உள்ளது. இது தேர்தலில் எதிரொலித்து உள்ளது. இதனால் முதல்வர் பதவியை கொடுக்க வேண்டும் என கோரினார். இறுதியாக காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியை கொடுத்தது. டிகே சிவக்கமாருக்கு துணை முதல்வர் பதவியை வழங்கி உள்ளது.
இதற்கிடையே தான் முதல்வர் பதவியில் முதல் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே சித்தராமையா இருப்பார். அதன்பிறகு அடுத்த இரண்டரை ஆண்டுகள் டிகே சிவக்குமார் முதல்வராக பொறுப்பு வகிப்பார் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன. தற்போதைய சூழலில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி என்பது சுமூகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தான் கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் அரசிகெரே அருகே உள்ள ஹாரனஹள்ளி கிராமத்தில் கோடிமடத்தின் மடாதிபதி ஸ்ரீசிவானந்த் சிவயோகி ராஜேந்திர மகாசுவாமி எதிர்காலம் குறித்த பல்வேறு கணிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி தற்போது அவர் நாட்டில் 2024ம் ஆண்டு உகாதிக்குள் 3 பெரிய தலைவர்களுக்கு சிக்கல் ஏற்படலாம். இதனால் அரசியல் கட்சியினர் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இவரது முந்தைய பல கணிப்புகள் பலித்துள்ள நிலையில் கர்நாடகா காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியுடன் இருந்தாலும் தலைவர்களால் ஆட்சிக்கு பிரச்சனை ஏதும் ஏற்படுமா? என அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு மடாதிபதி ஸ்ரீசிவானந்த் சிவயோகி ராஜேந்திரா மகாசுவாமி, ‛‛மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை.
இருப்பினும் சிலர் வேகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் விரும்புகின்றனார். அது அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சில எதிர்பாராத சம்பவங்கள் நடக்கலாம். அரசியலில் குழப்பங்கள் நிகழலாம். இருப்பினும் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மக்கள் நலன் சார்ந்த அரசாக ஆட்சி இருப்பது முக்கியமாகும்'' என தெரிவித்துள்ளார்.
-
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
டிகே சிவக்குமாருக்கு புதிய சிக்கல்.. பெங்களூர் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து போர்க்கொடி.. பரபரப்பு -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications