4-5 மாசம் தான்.. காங்கிரஸ் ஆட்சி தொடராது.. கர்நாடகா கேபினட் இழுபறிக்கு இடையே பொம்மை சொன்ன வார்த்தை!
பெங்களூர் : கர்நாடகாவில் அமைச்சரவை அமைப்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் டெல்லியில் ஆலோசித்து வரும் நிலையில், காங்கிரஸ் அரசு முழு பதவி காலத்தையும் முடிக்க முடியாது என முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டிகே சிவக்குமாரும் அண்மையில் பதவியேற்றுக்கொண்டனர். மேலும் 8 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இந்நிலையில், அமைச்சரவையை விரிவாக்குவது, இலாகா ஒதுக்குவது தொடர்பாக சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் டெல்லிக்குச் சென்று காங்கிரஸ் மேலிடத்துடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி செல்லும் பாதை சரியில்லை என்றும், இன்னும் 5 மாதங்களில் கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்றும் முன்னாள் முதலமைச்சரும், பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஹாவேரி மாவட்டம் சிக்காவியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவச திட்டங்களை நிறைவேற்றுவோம் என மக்களிடம் பொய் வாக்குறுதிகளை அளித்திருந்தனர்.
அமைச்சரவை கூட்டத்தில் இலவச திட்டங்களுக்கு ஒப்புதல் மட்டும் அளித்துவிட்டு, அமல்படுத்திவிட்டது போல் நாடகமாடுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக பாஜக தலைவர்கள், தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். பழிவாங்கும் அரசியலில் காங்கிரஸ் ஈடுபடுகிறது.
பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய திட்டங்கள், வளர்ச்சி பணிகளை நிறுத்துவதாக காங்கிரஸ் தலைவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். பல்வேறு தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் பாஜக தோல்வி அடைந்திருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும். மோடி மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்பார். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படுவது உறுதி.
தற்போது காங்கிரஸ் ஆட்சி செல்லும் பாதை சரியாக இல்லை. அவர்கள் ஆட்சி நடத்தும் விதம், பதவி தொடர்பான மோதல் காரணமாக காங்கிரஸ் ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்க வாய்ப்பில்லை. இன்னும் 5 மாதங்களில் கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படும்.
புதிய அமைச்சர்கள் புதிதாக திருமணமான மருமகளைப் போன்று, அவர்களுக்கு கருவூலத்தின் சாவியோ அல்லது பொறுப்புகளோ இன்னும் தரப்படவில்லை. அமைச்சர்கள் எந்த இலாகாவும் இல்லாமல் உட்கார வைக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications