ஒரே வறுமை.. வேலையில்ல.. கலங்கும் கர்நாடக மக்கள்! பெரிய பிரச்சனை இதானாம் - தேர்தல் கருத்துக்கணிப்பு
பெங்களூரு: கர்நாடகாவில் இம்மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கும் வறுமையும் வேலையின்மையுமே மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் என்று என்டிடிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்து உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் பசவராஜ் பொம்மை தலைமையிலான ஆட்சி காலம் நிறைவடைய இருக்கிறது. இதனை தொடர்ந்து வரும் மே 10 ஆம் தேதி கர்நாடக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

இது தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டு உள்ளன. அதன்படி பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில் வெற்றிபெறும் என்றே தெரிவிக்கின்றன. அந்த வகையில் என்டிடிவி - சிஎஸ்டிஎஸ் இணைந்து கருத்துக்கணிப்பை நடத்தி இருக்கின்றன.
கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. அதன்படி கர்நாடக மாநில மக்களின் முக்கிய பிரச்சனைகளாக என்னவெல்லாம் உள்ளன என்ற கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. அதற்கு ஏராளமான மக்கள் தங்கள் பதில்களை வழங்கி உள்ளனர்.
அதன்படி நடக்க உள்ள கர்நாடக தேர்தலில் எதிரொலிக்கும் முக்கிய பிரச்சனையாக வேலையின்மையே இருக்கும் என்றும் 28 சதவீத மக்கள் தெரிவித்து உள்ளார்கள். 2 வது இடத்தில் வறுமை இருக்கும் 25 சதவீதம் பேர் பிரச்சனையாக இருக்கும் என்று தெரிவித்து இருக்கின்றனர். இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு வேலையின்மையை முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. அதே நேரம் கர்நாடக கிராம புறங்களில் வறுமையே பெரிய பிரச்சனையாக உள்ளது.
இதில் வளர்ச்சி பிரச்சனைகள், விலைவாசி உயர்வு, கல்வி போன்றவை முக்கிய பிரச்சனைகள் என்று தலா 7 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். 6 சதவீதம் பேர் ஊழலை முக்கிய பிரச்சனையாக கூறி உள்ளனர். ஒரு சதவீதம் பேர் கருத்து தெரிவிக்கவில்லை. அதே நேரம் 19 சதவீதம் பேர் இதர பிரச்சனைகளை தெரிவித்து இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications