முன்ஜாமீன் கொடுங்க.. நீதிமன்ற கதவை தட்டிய பிரஜ்வல் ரேவண்ணா! நாளை நாடு திரும்புகிறாராம்
பெங்களூர்: கர்நாடகாவில் பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார் பெரும் சலசலப்புகளை கிளப்பியுள்ளது. இந்நிலையில், பாலியல் புகாருக்கு எதிராக பிரஜ்வல் ரேவண்ணா முன்ஜாமீன் கோரி பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
கர்நாடக மாநிலம், ஹாசன் லோக்சபா தொகுதி மஜத எம்.பியாக இருந்தவர்தான் பிரஜ்வல் ரேவண்ணா, இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக ஷேர் ஆன நிலையில், இது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு அமைப்பை அம்மாநில அரசு அமைத்திருக்கிறது.

லோக்சபா தேர்தலில் பாஜகவுடன், மஜத கூட்டணியில் இருப்பதால் இந்த விவகாரத்தை காங்கிரஸ் தீவிரமாக கையில் எடுத்திருக்கிறது. கர்நாடகாவில் பல இடங்களில் மகளிர் காங்கிரஸார் பிரஜ்வாலுக்கு எதிராக தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் மட்டுமல்லாது தேசிய அரசியலிலும் பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பிரஜ்வல் மஜத கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் கோரி பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் பிரஜ்வல் மனு தாக்கல் செய்திருக்கிறார். தற்போது வரை பிரஜ்வல் இந்தியாவுக்குள் வரவில்லை. வெளிநாடுகளில் தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டை பிரஜ்வல் மறுத்திருக்கிறார். தேர்தல் முடியும் வரை தன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும் எனவே, தன்னுடைய பயணம் ஏற்கெனவே திட்டமிடப்பட்டதுதான் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில் சிறப்பு புலனாய்வு விசாரணைக்காக பிரஜ்வல் நாளை ஆஜராக இருக்கிறார். இதற்காக அவர் பெங்களூர் வர இருப்பதாக வெளிநாட்டின் செய்தி ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
இப்படி இருக்கையில் பிரஜ்வல் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை நீதிபதி சந்தோஷ் கஜானன பட் விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார். அதே நேரரம், வழக்கை விசாரித்து வரும் எஸ்ஐடி, தனது ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய போதுமான கால அவகாசத்தை வழங்குவதாகவும் கூறி, வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.
எஸ்ஐடி தாக்கல் செய்யும் வாதங்கள் மற்றும் பிரஜ்வல் வழக்கறிஞரின் வாதங்களை கேட்டு நீதிபதி தீர்ப்பு வழங்குவார். இருப்பினும், இந்த வழக்கு பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளதால், பிரஜ்வல் நாடு திரும்பிய உடன் கைது செய்யப்படுவார் என்று சொல்லப்படுகிறது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications