வீடியோ காலில் டிரஸ்சை கழற்ற சொல்வார்.. என் அம்மாவையும்! பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் ஒரு பெண் புகார்
பெங்களூர்: பிரஜ்வல் ரேவண்ணா எனக்கு போன் செய்து மிரட்டுவார். வீடியோ காலில் பேசி ஆடைகளை கழற்ற சொல்வார். நான் மறுத்து போனை எடுக்காவிட்டால் எனது அம்மா போனில் இருந்து பேசி பேசுமாறு வற்புறுத்துவார் என்று பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி சிட்டிங் எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா, 300 பெண்களை பலாத்காரம் செய்தார் என்ற குற்றச்சாட்டு அம்மாநிலத்தில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. 300 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் வெளியாகி தேர்தல் நேரத்தில் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ப்ளூ கார்னர் நோட்டீஸ்: பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க கர்நாடகா சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே, தன் மீதான குற்றச்சாட்டு வெளிச்சத்திற்கு வரும் முன்பாக பிரஜ்வல் ரேவண்னா வெளிநாட்டிற்கு தப்பிவிட்டார். பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக மதசாரபற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
தற்போது ஜெர்மனியில் இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. அவர் பெங்களூர் திரும்ப டிக்கெட் பதிவு செய்து வைத்து இருந்ததாகவும் அதையும் தற்போது ரத்து செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா மட்டும் இன்றி அவரது தந்தை எச்.டி ரேவண்ணா மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மேலும் ஒரு பெண் புகார்: இந்த புகாரில் கைதான ரேவண்ணா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவில் மேலும் ஒரு பெண் திடுக்கிடும் புகாரை அளித்துள்ளார். அந்த பெண் கூறியதாவது:- எனது அம்மா எச்.டி. ரேவண்ணா வீட்டில் வேலை பார்த்து வந்தார்.
அப்பா மகன் இருவரும்: அங்கு வேலை பார்த்த்த சமயத்தில் பலமுறை எச்.டி. ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோரால் எனது தாயார் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். என் அம்மா நான்கு, ஐந்து மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவார். மிகவும் துன்புறுத்தப்பட்டு இருக்கிறார் என்பதை உணர்வோம்.
ஆடைகளை கழற்ற சொல்வார்: பிரஜ்வல் ரேவண்ணா எனக்கு போன் செய்து மிரட்டுவார். வீடியோ காலில் பேசி ஆடைகளை கழற்ற சொல்வார். நான் மறுத்து போனை எடுக்காவிட்டால் எனது அம்மா போனில் இருந்து பேசி பேசுமாறு வற்புறுத்துவார். நான் மறுத்த போது என்னையும் எனது தாயாரையும் அடிப்பதாக மிரட்டுவார்" என்று புகார் அளித்துள்ளார். சிறப்பு புலனாய்வு குழுவில் தற்போது பிரஜ்வல் ரேவண்னாவிற்கு எதிரான புதிய புகார் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்: இதற்கிடையே, பிரஜ்வல் ரேவண்ணா மீதான வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், இந்த வீடியோக்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வீடியோக்களை பரப்பியது காங்கிரஸ் தலைவர்களுக்கு பங்கு இருப்பதாக பாஜக மற்றும் ஜேடிஎஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில், தான் வீடியோக்களை வெளியிட்டதாக பாஜகவை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications