பென் டிரைவில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்.. பிரஜ்வல் ரேவண்ணா சிக்கியது எப்படி? கர்நாடகாவை உலுக்கிய வழக்கின் டைம்லைன்
பெங்களூர்: முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு (Prajwal Revanna Scandal) சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இன்று நீதிமன்றம் இந்த தண்டனையை அறிவித்தது. கர்நாடகத்தை உலுக்கிய இந்த வழக்கின் முழு விவரங்களை இங்கு பார்க்கலாம்.
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியின் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் ஆவார். முன்னாள் எம்.பி.யான இவருக்கு பாலியல் வழக்கில் வாழ்நாள் முழுக்க சிறைத் தண்டனை விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத்தை உலுக்கிய இந்த வழக்கின் விவரங்களைப் பார்க்கலாம்.

பாலியல் வீடியோக்கள் பென் டிரைவ்
* கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், பிரஜ்வல் ரேவண்ணாவுடன் தொடர்புடைய 2,000-க்கும் மேற்பட்ட பாலியல் வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ் விவகாரத்தை எழுப்பி, கர்நாடக பாஜக தலைமைக்கு அக்கட்சியைச் சேர்ந்த தேவராஜே கவுடா கடிதம் எழுதியிருந்தார்.
* காங்கிரஸ் கட்சியிடம் இந்த பென் டிரைவ் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இதனால், கூட்டணியில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா என்ற பேச்சு எழுந்தது. இருப்பினும், கர்நாடகத்தில் லோக்சபா தேர்தலில் பாஜக - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உறுதியானது.
பாஜகவுக்கும் தர்மசங்கடமான சூழல்
* ஏப்ரல் 19 ஆம் தேதி, அதாவது தேர்தல் நெருங்கிய நிலையில், பிரஜ்வல் அந்தரங்க வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ்கள் பொது இடங்களில் வீசப்பட்டன. பாலியல் வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாயின. இது தேவேகவுடா குடும்பத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. பாஜகவுக்கும் தர்மசங்கடமான சூழலை உருவாக்கியது.
* ஏப்ரல் 24 ஆம் தேதி, மாநில மகளிர் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க, மாநில மகளிர் ஆணையம் முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் எழுதியது.
பணிப்பெண் கொடுத்த புகார்
* ஏப்ரல் 26 ஆம் தேதி, பிரஜ்வல் ரேவண்ணா தனது வாக்கைப் பதிவு செய்துவிட்டு, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். ஆனால், அன்று இரவே ரகசியமாக ஜெர்மனிக்கு பறந்தார்.
* கர்நாடகத்தில் இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பிய நிலையில், ஏப்ரல் 27, 2024 அன்று, சிறப்பு விசாரணைக் குழுவை அமைப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்தார். இதையடுத்து, ஏப்ரல் 28 ஆம் தேதி, பிரஜ்வல் வீட்டுப் பணிப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பாஸ்போர்ட்டை ரத்து செய்ய
* ஏப்ரல் 30 ஆம் தேதி, பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்யுமாறு தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியது. அதே நாளில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா இடைநீக்கம் செய்யப்பட்டார்.
* மே 1 ஆம் தேதி, திடீரென தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரஜ்வல் ரேவண்ணா, "உண்மை வெல்லும்" என்று கூறியிருந்தார். மேலும், 7 நாட்களில் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராவேன் என்று கூறினார். அடுத்த நாளே, பிரஜ்வலின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம் எழுதினார்.
4 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு
* பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு எதிராக மேலும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இதன் பேரிலும் ரேவண்ணா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, மே 4 ஆம் தேதி, கடத்தல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை எச்.டி. ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.
* பிரஜ்வல் ரேவண்ணா மீது ஒட்டுமொத்தமாக 4 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின. இது குறித்து எஸ்.ஐ.டி. போலீசார் விசாரித்து வந்தனர். தனது பேரன் பிரஜ்வலுக்கு தேவேகவுடாவும் கடிதம் எழுதியிருந்தார். அதில், இந்தியா திரும்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறியிருந்தார்.
சிறையில் அடைத்த போலீசார்
* மே 31 ஆம் தேதி, பெங்களூருக்கு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணாவை எஸ்.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ரேவண்ணா மீதான வழக்குகளில், 48 வயதான வேலைக்காரப் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கு முக்கியமானதாகும். கடந்த 2021-ம் ஆண்டு முதலே வேலைக்காரப் பெண்ணை அவர் மிரட்டி வந்திருந்தார்.
* இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடித்த எஸ்.ஐ.டி. போலீசார், கடந்த ஆண்டு இறுதியில் பெங்களூர் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். கடந்த 7 மாதங்களாக நடந்த விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியது.
சாகும் வரை ஆயுள் தண்டனை
* கடந்த மாதம் (ஜூலை 18 ஆம் தேதி), அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றன. நேற்று, வேலைக்காரப் பெண் பலாத்கார வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என்று நீதிபதி சந்தோஷ் கஜனன் பட் அறிவித்தார். மேலும், அவருக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படும் என்றும் கூறினார். அதன்படி, இன்று சாகும் வரை ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications