Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொட கூடாத இடத்தில்.. பற்றி எரியும் பென்டிரைவ், 68 வயது பணிப்பெண்ணையும் விடாத பிரஜ்வல்? மலைத்த பாஜக?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: 1990ம் ஆண்டு காலகட்டங்களில் ஹாசனில், தேவகவுடா குடும்பத்தை எதிர்க்க ஒரு ஆள் கூட இல்லை என கர்நாடக மாநிலமே வாயில் கை வைத்த வரலாறு உண்டு.. அப்பேர்ப்பட்ட தேவகவுடாவின் குடும்பம், இன்று கர்நாடக பெண்களின் வாயில் விழுந்து கொண்டிருக்கிறது.. இது பாஜகவையும் சேர்த்து "கறைபடுத்தி" கொண்டிருக்கிறது. என்ன நடந்தது?

தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.. இவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா., தங்களது பாரம்பரிய தொகுதியான ஹாசனின் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். இப்போது பாஜக கூட்டணியில் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார் பிரஜ்வல்..

Prajwal Revannas 2800 videos 8000 Pendrives 68 year old woman begging her for life Heart Break Biggest scandal

வாக்குப்பதிவு: வாக்குப்பதிவுக்கு கர்நாடகா மாநிலமே தயாராகி கொண்டிருந்த நேரத்தில்தான், பிரஜ்வல ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் ஷேர் ஆக தொடங்கின.. ஆரம்பத்தில் இந்த வீடியோக்களை யாருமே நம்பவில்லை..

தேர்தல் சமயத்தில் இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட வீடியோக்கள் வெளியாவது சகஜம்தான் என்று நினைத்தனர்.. ஆனால், 300க்கும் மேற்பட்ட பெண்களை பிரஜ்வல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டதுதான் இந்த வழக்கில், முதல் சந்தேகத்தை கிளப்பியது.

ரேவண்ணா:
இப்படி ஒரு விஷயம் கசிந்ததுமே, பிரஜ்வல் ரேவண்ணா, இங்கிருந்து தப்பி ஜெர்மனியில் பதுங்கிவிட்டது, இரண்டாவது சந்தேகத்தை கிளப்பியது. இறுதியில், ரேவண்ணா வீட்டு பணிப்பெண், ஒலேநரசிப்புரா போலீசில் கதறி அழுது, புகார் தந்திருந்தது, ஒட்டுமொத்த சந்தேகத்தையும் தகர்த்து, அனைத்து குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

பணிப்பெண் புகாரில், "ரேவண்ணாவின் மனைவி வீட்டில் இல்லையென்றால், ரேவண்ணாவும், பிரஜ்வல் ரேவண்ணாவும் பெண்களை பலாத்காரம் செய்வதையே பிழைப்பாக வைத்திருக்கிறர்கள்.. பிரஜ்வல் என்னை அவரது ரூமுக்கு அழைப்பார்.. ஸ்டோர் ரூமில்தான் முதலில் தன்னுடைய சில்மிஷத்தை துவங்குவார். தொடக்கூடாத இடங்களில் தொடுவார்.. சேலையில் உள்ள "சேப்ட்டி பின்"னையும் அவரே கழற்றிவிட்டு, பலாத்காரத்தில் ஈடுபடுவார்.. அப்பாவும், மகனும் பெண்களை இப்படித்தான் வேட்டையாடுவார்கள்" என்றார்

வழக்கு பதிவு: இப்போது, பிரஜ்வல் ரேவண்ணா மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவாகி உள்ளது.. ஒருபக்கம், பெண்கள் பாதுகாப்பு ஆணையம் கொந்தளித்து வருகிறது.. மறுபக்கம், மகளிர் காங்கிரஸ் ஆவேசமாகி உள்ளது..

இதற்கு நடுவில் ஜேடிஎஸ் கட்சியை சார்ந்த பெண்களே விக்கித்து போயிருக்கிறார்கள்.. ஒட்டுமொத்தமாக, பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான போராட்டங்களும் வலுத்து கொண்டிருக்கின்றன.. பிரஜ்வல் ரேவண்ணாவின் போட்டோக்களை செருப்பாலும், துடைப்பத்தாலும் அடித்து முழக்கமிட்டு கொண்டிருக்கிறார்கள்.

வீடியோக்கள்:
ஆனால், கசிந்த ஆபாச வீடியோக்களில் பிரஜ்வல் முகம் தெளிவாக தெரியவில்லை என்கிறார்கள்.. அதேசமயம், உதவி கேட்டு சென்ற தங்களை பிரஜ்வல் தவறாக பயன்படுத்தி கொண்டதாகவும், நெருக்கமாக இருக்கும்போது வீடியோ எடுத்து, அதை வைத்து மிரட்டுவதாகவும், சில பெண்கள் கன்னட சேனல்களுக்கு பகிரங்கமாகவே பேட்டி அளித்திருப்பது, கர்நாடக அரசியலில் மிகுந்த பரபரப்பை தந்துவருகிறது.

பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய 2,976 ஆபாச வீடியோக்கள் திடீரென முளைத்த விவகாரம் இல்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. சில மாதங்களுக்கு முன்பேயே, கட்சிரீதியாக அனைவருக்குமே தெரிந்திருக்கின்றன.. அதனால்தான், ஜேடிஎஸ் கட்சியை பாஜக கூட்டணிக்குள் சேர்த்து கொள்ளகூடாது என்று கடந்த 5 மாதங்களுக்கு முன்பிருந்தே, மாநில பாஜகவுக்கு "அழுத்தங்கள்" தரப்பட்டதாம்.

பென் டிரைவ்கள்: ஆபாச பென் டிரைவ்கள் அத்தனையும் காங்கிரசுக்கு சிக்கியிருப்பதால், எப்படியும் இதையே ஆதாரமாக வைத்து, தேர்தல் நேரத்தில் டேமேஜ் செய்துவிடும் என்பதால், ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் வேண்டாம் என்றும் எடுத்து சொல்லப்பட்டதாம்.

அதுமட்டுமல்ல, பாஜக + ஜேடிஎஸ் கூட்டணி பேச்சுவார்த்தையின்போதும் இந்த விவகாரம் வெடித்துள்ளது.. பிரஜ்வல் ஆபாச வீடியோக்கள் தேர்லின்போது கசியும் என்பதால், இந்த முறை பிரஜ்வலை தேர்தலில் நிறுத்த வேண்டாம் என்று பாஜக மேலிடம், குமாரசாமியிடமும், தேவகவுடாவிடமும் வலியுறுத்தியதாம்.. ஆனாலும், ரேவண்ணாவின் பிடிவாதம், தன்னுடைய மகனுக்கும் சீட்டை பெற்று தந்துவிட்டதாம்.

டேமேஜ்: கர்நாடகாவில் பலம்பொருந்திய காங்கிரஸை தோற்கடிக்க வேண்டுமானால், ஜேடிஎஸ்ஸுடன் கூட்டணி வைத்தாக வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கும் ஏற்பட்டுள்ளதால், வேறு வழியின்றி இந்த முடிவை ஆமோதித்ததாக சொல்கிறார்கள். கடைசியில், இன்று ஜேடிஎஸ் மட்டுமல்லாமல், கர்நாடகாவில் முட்டி மோதி மேலே வர துடித்து கொண்டிருக்கும் பாஜகவுக்கு, இது நெருடலை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வழக்கு குறித்து, கர்நாடக அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணை குழுவுக்கு பிரஜ்வலின் சித்தப்பாவான குமாரசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.. அதேசமயம், காங்கிரசும் இதை விடுவதாக இல்லை..

கிராம பெண்கள்: ''காங்கிரஸ் அரசின் இலவச வாக்குறுதி திட்டங்களால், கிராம பெண்கள் வழிதவறி விட்டனர் என்று குமாரசாமி சொல்கிறாரே, இப்போது அவரது குடும்ப மகனே வழிதவறியிருக்கிறாரே? வழிதவறியது யார்? கிராம பெண்களா? உங்கள் வீட்டு மகனா? தேவகவுடா, குமாரசாமி இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கர்நாடக வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா கறாராக கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக அரசியலையும் தாண்டி, இந்த சம்பவம் பொதுவெளியில் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.. சோஷியல் மீடியாவிலும் பிரஜ்வல்லுக்கு எதிரான கருத்துக்கள் பதிவாகி வருகின்றன..

வயது முதிர்ந் பெண்: "அந்த பணிப்பெண்ணுக்கு 68 வயதாகிறது.. தன்னைவிட வயது முதிர்ந்த பெண்ணிடம் செய்யும் வேலையா இது? 68 வயது பணிப்பெண்ணையும் விட்டுவைக்காதவர்கள், இளம் பெண்களை எப்படி விட்டுவைத்திருக்க முடியும் என்று இணையவாசிகள் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்..

2800 ஆபாச வீடியோக்களிலும் சிக்கியிருப்பது பாதிக்கப்பட்ட பெண்கள்தான்.. குறிப்பாக, சொந்த கட்சி பெண் நிர்வாகிகள், அரசு பணியில் டிரான்ஸ்பர் கேட்டும், பதவி உயர்வு கேட்டும் உதவிக்கு செல்பவர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர்.. இதில், வீட்டு வேலை பார்ப்பவர்களும் சிக்கி சீரழிந்துள்ளனர்.

அட்டகாசம்: இந்த அட்டகாசம் எல்லாம் தேவகவுடா குடும்பத்தினருக்கு முன்பே தெரியாமல் இருந்திருக்காது.. நிச்சயம் அவர்களுக்கு தெரியும்.. அதேபோல அரசியல் கட்சிகளுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும்.. இப்படி எல்லா அரசியல்வாதிகளும் ஒரே மாதிரியாக இருந்தால், நாங்கள் யாருக்கு ஓட்டு போடுவது? என்று கேள்விகளால் துளைத்தெடுத்து வருகிறார்கள் சொந்த மாநில மக்கள்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+