பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெங்களூரு மத்திய லோக்சபா தொகுதியில் சுயேச்சையாக போட்டி... பிரகாஷ் ராஜ் அறிவிப்பு

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக அரசியலில் களம் கண்டுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், பெங்களூரு மத்திய லோக்சபா தொகுதியில் சுயேச்சையாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியப் போவதாக அறிவித்துள்ளார்.

சமீப காலமாக அரசியலை நோக்கி பல்துறையினரும் திரண்டோடி வருகின்றனர். அவர்களில் முக்கியமானவர் பிரகாஷ் ராஜ். பிரதமர் நரேந்திர மோடியை மிகக் கடுமையாக விமர்சித்து வருபவர்களில் இவரும் ஒருவர். இந்த நிலையில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தான் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக பிரகாஷ் ராஜ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

Prakash Raj to contest from Bangaluru Central

இன்று அவர் தான் போட்டியிடும் தொகுதியை அறிவித்துள்ளார். தான் சார்ந்த கர்நாடக மாநிலத்தில் அவர் போட்டியிடுகிறார். பெங்களூர் மத்திய தொகுதியை அவர் தேர்வு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில் கூறியுள்ளதாவது:

2019 நாடாளுமன்றத் தேர்தல். எனது புதிய பயணத்திற்கு ஊக்கமும், வாழ்த்தும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. நான் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடவுள்ளேன். விரைவில் முழு விவரங்களை நான் ஊடகங்கள் வாயிலாக தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார் பிரகாஷ் ராஜ்.

பிரகாஷ் ராஜின் இந்த அறிவிப்பால் கர்நாடக தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

English summary
Actor Prakash Raj has announced that he will contest in Bangaluru Central LS constituency in the 2019 Loksabha Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X