கிளாஸ்ரூமில்.. மாணவியிடம் ஹெச்.எம் செய்த காரியம்.. ஒளிந்திருந்து பார்த்த மாணவர்களின் அதிரடி
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார் பள்ளியின் தலைமை ஆசிரியர்
பெங்களூரு: கிளாஸ் ரூமிலேயே மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியரை மாணவர்கள் கையும் களவுமாக பிடித்து மாட்டிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகாவில் அந்த தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்... இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் பாலியல் விவகாரத்தில் சிக்கி உள்ளார்..

அத்துமீறல்
தன்னுடைய மாணவிகளிடமே அத்துமீறி நடந்து வந்துள்ளார்... தொடர்ச்சியாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லையும் தந்து வந்திருக்கிறார்.. இதனால் ஏகப்பட்ட புகார்கள் அந்த பள்ளி தலைமை ஆசிரியர் மீது குவிந்த வண்ணம் இருந்துள்ளன.. ஆனாலும் யாரும் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பேச்சே எடுக்கவில்லை.. மாணவர் - மாணவியர்களும் இதற்கு எப்படி முடிவு கட்டுவது என்று தெரியாமல் விழித்து வந்துள்ளனர்.

ஆசை வார்த்தை
இந்த நிலையில் சம்பவத்தன்றும், தன்னுடைய பள்ளியில் படித்து வரும் ஒரு மாணவியை தனது ஆசைக்கு இணங்கும்படி ஆசை வார்த்தைகள் சொல்லி உள்ளார்.. மாணவியும் அவரது பேச்சுக்கு பயந்து, அதற்கு இணங்கி உள்ளார். இதையடுத்து மாணவியை கட்டாயப்படுத்தி தலைமை ஆசிரியர் அடிக்கடி நெருக்கமாக இருந்துள்ளார். கிளாஸ் ரூமில் ஆளில்லாத நேரத்தில் அந்த மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டு இருந்துள்ளார்..

வீடியோ
இதை சில மாணவர்கள் பார்த்துவிட்டு, அதை ஒளிந்திருந்து தங்களது செல்போனில் வீடியோவும் எடுத்துவிட்டனர்.. அந்த வீடியோவை கல்வித்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். தவிர, சோஷியல் மீடியாவிலும் அதை பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி பெற்றோர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விசாரணை
இதுபற்றி விசாரணை நடத்தும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர்... அதன்பேரில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரிடமும் விசாரணை வட்டார கல்வித்துறை அதிகாரி தலைமையிலான குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்... வகுப்பு ஆசிரியர்கள், பெரியவர்களிடம் விஷயத்தை சொல்லியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மாணவர்களே இதற்கு ஒரு முடிவு எடுத்துள்ளனர்.. இந்த சம்பவம் மைசூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications