எனக்கு தனிப்பட்ட இழப்பு.. புனித் கோபாலபுரம் வந்தது நெஞ்சில் நிழலாடுகிறது- முதல்வர் ஸ்டாலின் உருக்கம்
பெங்களூர்: நடிகர் புனித் ராஜ்குமாரின் மரணத்திற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார்.
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இன்று காலை மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். 46 வயதாகும் அவர், இன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
மோசமான உடல்நிலையோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். நடிகர் புனித் ராஜ்குமார் மரணத்திற்கு திரையுலகினர், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இரங்கல்
நடிகர் புனித் ராஜ்குமாரின் மரணத்திற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார். பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனும், பிரபல கன்னட பவர் ஸ்டாருமான நடிகர் புனித் ராஜ்குமாரின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நம் இருவரின் குடும்பங்களும் பல வருடங்களாக அன்பான, நெருக்கமான உறவை கொண்டது. அந்த வகையில் இந்த மரணம் எனக்கு தனிப்பட்ட இழப்பு.

ஸ்டார்
மிகப்பெரிய ஸ்டாராக இருந்த போதிலும் புனித் மிகவும் அடக்கமான பண்பு கொண்டவராக இருந்தார். கலைஞர் கருணாநிதியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிப்பதற்காக கோபாலபுரம் இல்லம் தேடி அவர் வந்தது இன்னும் நெஞ்சில் அப்படியே மாறாமல் பசுமையாக நிழலாடுகிறது.

கன்னட உலகம்
கன்னட திரையுலகம் அதன் மிகச்சிறந்த நபரை, அடையாளத்தை இழந்துவிட்டது. இந்த ஈடு செய்ய முடியாத இழப்பால் துயருற்றிருக்கும் புனித் குடும்பத்தினருக்கும், கர்நாடக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்று முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கலில் குறிப்பிட்டு இருக்கிறார்.

திமுக கனிமொழி
திமுக எம்பி கனிமொழி செய்துள்ள இரங்கல் ட்விட்டில், மக்களின் மனம் வென்ற, கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் அவர்களின் மறைவு, திரையுலகிற்கு பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல், என்று குறிப்பிட்டுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications