சித்தராமையா பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்.. 11 பேர் மயக்கம்! தட்சிண கன்னடாவில் பரபரப்பு
பெங்களூர்: தட்சிண கன்னட மாவட்டம் புட்டூரில், முதல்வர் சித்தராமையா பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி சுமார் 11 பெண்கள் மயக்கமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, புட்டூர் எம்எல்ஏ அசோக் ராயின் தலைமையில் 'அசோக ஜனமன-2025' எனும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு ஆடைகள் விநியோகிக்கும் இந்த நிகழ்வில் முதல்வர் சித்தராமையா கலந்துகொண்டார். புட்டூர் தாலுகா மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

திட்டமிட்ட நேரத்தை விட தாமதமாக நிகழ்ச்சி தொடங்கியது. மதியம் 4 மணிக்குதான் உணவு பரிமாறப்பட்டது. நிகழ்ச்சி தாமதமானதால் அதிக அளவில் மக்கள் மைதானத்தில் குவிந்தனர். இதனையடுத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "உணவு மற்றும் பிற பொருட்கள் விநியோகிக்கப்பட்ட இடத்திற்கு மக்கள் படையெடுத்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உணவு மற்றும் பரிசுகள் வழங்குவதில் ஏற்பட்ட தாமதமே இந்த சம்பவத்திற்குக் காரணம். நீண்ட நேரமாக மக்கள் ஒரே இடத்தில் நின்றுக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. எனவே நீர்ச்சத்து குறைபாடு காரணமாக பெண்கள் மயக்கமடைந்தனர். மூன்று பெண்களுக்கு நரம்பு வழி திரவங்கள் செலுத்தப்பட்டன. மேலும், ஏழு பெண்கள் மருத்துவ சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளனர்" என்று கூறியிருக்கிறார்.
மைதானத்தின் கொள்ளளவை விட கூட்டம் அதிகமாக இருந்ததால், பெண்கள் மற்றும் குழந்தைகள் நெரிசலில் சிக்கினர். மூச்சுத்திணறி மயக்கமடைந்தனர். முதல்வர் சித்தராமையா அங்கிருந்து கிளம்பிய உடனேயே இது நடந்தது. அங்கு கூடியிருந்த மக்கள், சரியான குடிநீர் வசதி இல்லை என்றும், சேறும் சகதியுமான மைதானத்தில் குழந்தைகளுடன் வந்த பல பெண்கள் சிரமப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
சமீபத்தில் கரூரில் விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சித்தராமையாவின் நிகழ்ச்சியில் 11 பேர் மயக்கமடைந்துள்ளனர்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications