கர்நாடகாவில் ராகு காலம் முடிந்தது.. ராகுல் காலம் வந்து விட்டது..கொண்டாடும் தொண்டர்கள்
பெங்களூரு: ராகு காலம் எல்லாம் முடிந்து விட்டது இனி எல்லாம் ராகுல் காலம்தான் என்று கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். பாஜக ஆட்சியில் எல்லாம் அமிர்தகாலம்தான் என்றும் டபுள் இஞ்சின் சர்க்கார் என்றும் பிரச்சாரம் செய்ததற்கு தற்போது காங்கிரஸ் கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கியுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியது போலவே காங்கிரஸ் கட்சி தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. மிக நீண்ட காலத்திற்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்கப்போகிறது.

ஆட்சியமைக்க 113 தொகுதிகள் இருந்தாலே போதும் பெரும்பான்மையுடன் அரியணையில் அமரலாம். மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது காங்கிரஸ் கட்சி. எதிர்காலம் இல்லாத கட்சி காங்கிரஸ் கட்சி என்றெல்லாம். பாஜகவினர் பிரச்சாரம் செய்தனர். மத்தியில் ஆட்சியில் இருப்பதால் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் இரட்டை இஞ்சின் செயல்பாடு இருக்கும். அது மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்றெல்லாம் பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர்.
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை அள்ளி வீசியது. பெண்களுக்கு இலவச பேருந்து, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 2000 என கூறவே பெண் வாக்காளர்களின் மனதில் குறிப்பாக கிராமத்தில் உள்ள பெண் வாக்காளர்கள் மத்தியில் ஒருவித ஆர்வம் ஏற்பட்டது.
அது தவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஆரம்பம் முதலே ஊழல் விவகாரத்தில் பாஜக அரசை தொடர்ந்து தாக்கி வருகிறது. காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு எதிராக 40% கமிஷன் அரசு என்ற முழக்கத்தை முன்னெடுத்தது. இந்த முழக்கமும் வியூகமும்தான் கர்நாடகாவில் காங்கிரஸ் எளிதாக பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற காரணம் என கூறப்படுகிறது.
பெலகாவியில் ஒப்பந்ததாரர் ஒருவர் பாஜக அமைச்சர் மீது 40 சதவீதம் கமிஷன் கேட்டதாக குற்றம் சாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஒப்பந்ததாரர் சங்கம் மாநில அரசைக் கடுமையாக குற்றம் சாட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஹ ஜோதி திட்டம் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் எனவும், கிருஹ லக்ஷ்மி திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குடும்பத் தலைவிக்கும் மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்தது. அதோடு, யுவ நிதி என்னும் திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாயும், வேலையில்லாத டிப்ளமோ பட்டம் வைத்திருப்பவர்களுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் எனவும் அறிவித்தது. அன்ன பாக்யா என்னும் திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஒரு நபருக்கு மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக அளிக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தது. இத்தனை சிறப்பான இலவச அறிவிப்புகள் காங்கிரஸ் கட்சியை கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க வழி வகுத்து கொடுத்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் அமுல் vs நந்தினி என்ற பிரச்சினை ஆதிக்கம் செலுத்தியது. இந்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி, குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு கர்நாடகாவில் அமுல் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பிற்குப் பிறகு, இந்த விவகாரம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த தொடங்கியது. இதனை பல தலைவர்கள் மட்டுமல்லாது, கர்நாடக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர். இதை கட்டுப்படுத்த அரை லிட்டர் பால் இலவசமாக கொடுக்கப்படும் என பாஜக கூறியும் அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை.
காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை கர்நாடக மாநிலத்தில் பதிவு செய்துள்ளது. வாங்கி எண்ணிக்கை தொகுதி வாரியாக படிப்படியாக முடிந்து வெற்றி அறிவிப்பு வரத்தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி விட்டன. பாஜக அரசுக்கு முடிவு கட்டி விட்டோம் என்று கூறும் காங்கிரஸ் தொண்டர்கள், "கர்நாடகாவில் ராகு காலம் முடிந்து விட்டது..ராகுல் காலம் எனப்படும் நல்ல காலம் பிறந்து விட்டது" என்று கூறி வருகின்றனர். பாஜகவிற்கு இனி கஷ்ட காலம்தான் என்றும் தெரிவித்துள்ளனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications