பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

30 நாட்கள்.. நிறைவு செய்த ராகுலின் ஒற்றுமை யாத்திரை! தேர்தலுக்கு காத்திருக்கும் கர்நாடகாவில் ஆக்சன்

Google Oneindia Tamil News

பெங்களூரு: கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகாவில் 30 வது நாளை நிறைவு செய்து இருக்கிறார்.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை கடந்த 7 ஆம் தேதி தொடங்கினார் ராகுல் காந்தி.

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி 11 ஆம் தேதி கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு வந்தடைந்தார். தற்போது அவர் கர்நாடகாவில் நடைபயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

நிறுத்துங்க நிறுத்துங்க.. போதும்.. ராகுல் யாத்திரையில் பதறியடித்து ஓடி வந்த வேணுகோபால் - என்னாச்சு? நிறுத்துங்க நிறுத்துங்க.. போதும்.. ராகுல் யாத்திரையில் பதறியடித்து ஓடி வந்த வேணுகோபால் - என்னாச்சு?

 பயண விபரம்

பயண விபரம்

12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்தித்து வருகிறார்.

கர்நாடகாவில் யாத்திரை

கர்நாடகாவில் யாத்திரை

கன்னியாகுமரியில் தொடங்கி, கேரளாவின் பல மாவட்டங்கள் வழியாக 18 நாட்கள் நடந்து வந்த ராகுல் காந்தி, மீண்டும் கடந்த 29 ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்தார். அங்கிலிருந்து கர்நாடக மாநில எல்லைக்குள் நுழைந்த ராகுல் காந்தி, அக்டோபர் 1 முதல் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

கவனம் ஈர்க்கும் ராகுல்

கவனம் ஈர்க்கும் ராகுல்

கர்நாடகாவில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் பல்வேறு பகுதிகளுக்கு நடந்து சென்று மக்களை சந்தித்தும் கூட்டங்களில் பேசியும் வருகிறார். சில நாட்களுக்கு முன் கொட்டும் மழையில் ராகுல் காந்தி பேசிய படங்களும், பாத யாத்திரையில் பங்கேற்ற சோனியா காந்திக்கு ராகுல் காந்தி காலணி மாட்டிவிடும் காட்சியும் அதிகளவில் பகிரப்பட்டது.

பகிரப்படும் படங்கள்

பகிரப்படும் படங்கள்

இதேபோல் பல்வேறு தரப்பட்ட மக்களுடன் ராகுல் காந்தி நடந்து செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காங்கிரஸ் கட்சியினரால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக நேற்று கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் மனைவி மற்றும் சகோதரரி ஆகியோருடன் நடைபயணம் மேற்கொண்டார் ராகுல் காந்தி. ஹிஜாப் பிரச்சனையை இந்துத்துவாவினர் முதன்முதலில் கிளப்பிய கர்நாடக மாநிலத்தில், ஹிஜாப் தடைக்கு போராடி வரும் மாணவிகளையும் அவர் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Congress president Rahul Gandhi, who started the India Unity Yatra in Tamil Nadu's Kanyakumari district on the September 7th, is now completing the 30th day in Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X