Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடந்த இடமெல்லாம் வெற்றி.. கர்நாடகாவில் ராகுலின் ஜோடோ யாத்திரைக்கு கை மேல் பலன்.. டேட்டா இதோ!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்ட மாவட்டங்களில் அக்கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் கிடைத்துள்ளன. இதனால், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றிக்கு ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மிக முக்கிய பங்கு வகித்து இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்துடன் கூறி வருகின்றனர்.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக கடந்த 10 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 73.91 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனைப் போட்டி நிலவியது.

 Rahul Gandhis Bharat Jodo Yatra plays a vital role Karnataka election win- Congress credits

தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த அன்று மாலை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் கர்நாடகாவில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும் தொங்கு சட்ட சபைக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் முன்னணி செய்தி நிறுவனங்கள் கூறியிருந்தன. இதனால், கர்நாடகவின் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

நாடே எதிர்பார்த்த கர்நாடக தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை பெறத்தொடங்கியது ஒவ்வொரு சுற்று வாக்குகள் எண்ண எண்ண காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை பெற தொடங்கியது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கடந்து காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 133 இடங்களில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மையை எளிதாக கடந்து இருப்பதால் அங்கு எந்த சிக்கலும் இன்றி காங்கிரஸ் ஆட்சி அமைக்க தயராகி வருகிறது. நாளை பெங்களூரில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதல்வர் தேர்வு செய்யப்படுகிறார்.

காங்கிரஸ் கட்சியின் வெற்றி நாடு முழுவதும் அக்கட்சியினர் கொண்டாடி வரும் நிலையில்,அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரைக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டார்.

பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி மேற்கொண்ட இந்த யாத்திரைக்கு அக்கட்சியினர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இது வாக்குகளாக மாறுமா? என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்த நிலையில், அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கர்நாடக தேர்தல் முடிவுகள் வந்து உள்ளது.

 Rahul Gandhis Bharat Jodo Yatra plays a vital role Karnataka election win- Congress credits

கர்நாடகாவில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி கர்நாடக மாநிலத்திற்குள் நுழைந்தது. சாமராஜநகர், மைசூரு, மாண்ட்யா, தும்கூர், சித்ரதுர்கா, பெல்லாரி, மற்றும் ராய்ச்சூர் ஆகிய மாவட்டங்கள் வழியாக சுமார் 500 கி.மீட்டர் தொலைவிற்கு ராகுல் காந்தி பயணம் பாத யாத்திரை சென்றார்.

இந்த 7 மாவட்டத்திற்குட்பட்ட 51 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 38 இடங்களில் வெற்றி முகத்தில் உள்ளது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மூலம் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்து இருப்பதாக அக்கட்சியினர் பூரிப்புடன் சொல்லி வருகின்றனர்.

தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் காந்தி நடத்திய ஜோடோ யாத்திரை உற்சாகத்தை கொடுத்த நிலையில், அவரது யாத்திரை சென்ற இடங்களில் அதிக காங்கிரஸ் கட்சி வலுவாக கால் பதித்து இருப்பது அக்கட்சியினரை கூடுதல் உற்சாகம் அடைய வைத்துள்ளது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மிகப்பெரும் திருப்பு முனையை கொடுத்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+