செங்கோட்டை டூ மைசூர்.. பெங்களூரில் இருந்து தென்மாவட்டங்கள் வரை செப்டம்பரில் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
பெங்களூர்: செப்டம்பர் 4, 5, 7, 8 ஆகிய தேதிகளில் செங்கோட்டையிலிருந்து மானாமதுரை, காரைக்குடி, பெங்களூர் வழியாக மைசூர் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மைசூரில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 4.50 மணிக்கு செங்கோட்டையை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரவு 7:45க்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.20 மணிக்கு மைசூரை சென்றடைகிறது.
பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு ரயில்கள் மிகவும் குறைவு. பல லட்சம் பேர் ரயில்களில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் போதிய ரயில் வசதிகள் இல்லை.. இதனால் முக்கியமான நாட்களில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும். அந்த வகையில்., விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினங்கள், விடுமுறை தினங்கள் மொத்தமாக வருவதால் மைசூருல் இருந்து பெங்களூர் வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், செப்டம்பர் 4, 5, 7, 8 ஆகிய தேதிகளில் செங்கோட்டையிலிருந்து மானாமதுரை, காரைக்குடி, பெங்களூர் வழியாக மைசூர் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
இதன்படி செப்டம்பர் 4ம் தேதியான புதன்கிழமை மற்றும் செப்டம்பர் 8ம் தேதியான சனிக்கிழமை ஆகிய நாட்களில் மைசூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்திற்கு இரவு ஒரு மணிக்கு வருகிறது. அதன்பிறகு பாங்கருபேட் குப்பம் வழியாக தமிழ்நாட்டிற்குள் வந்து சேலம், கரூர் திருச்சி வழியாக கரைக்குடி சென்று அதன்பிறகு மானாமதுரை, அருப்புக்கோட்டை, ராஜபாளையம், தென்காசி வழியாக வழியாக செங்கோட்டைக்கு வியாழக்கிழமை மற்றும் ஞாயிறு அன்று மாலை 4.50க்கு செல்கிறது.

இதேபோல் மறுமார்க்கமாக செங்கோட்டையிலிருந்து 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரவு 7:45க்கு புறப்பட்டு செல்லும் ரயில தென்காசி, சிவகாசி, ராஜபாளையம், மானமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சேலம், குப்பம், பெங்களுர் வழியாக மைசூருக்கு வெள்ளிக்கிழமை மற்றும் திங்கள்கிழமை பிற்பகல் 2.20க்கு சென்றடைகிறது" இவ்வாறு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications