திடீரென மருத்துவமனைக்கு வந்த ரஜினிகாந்த்.. சூப்பர் ஸ்டாருக்கு என்னாச்சு? தீயாக பரவும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: உடல்நலக் குறைவால் பெங்களூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மூத்த சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சென்னையில் இருந்து பெங்களூர் சென்ற அவர், இன்று மதியம் மருத்துவமனைக்கு சென்று அண்ணனின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் இப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வருகிறார். வயது மூப்பு காரணமாக அது சார்ந்த உடல்நிலை பிரச்சினைகளால் அவர் அவதிப்பட்டு வருகிறார்.

Rajinikanth Hospital Visit Rajinikanth Hospital Rajinikanth

இதன் காரணமாக சமீபத்தில் அவர் அவர் பெங்களூரில் உள்ள ராஜராஜேஸ்வரி நகரில் அமைந்துள்ள ஜெயதேவ் மெமோரியல் ராஷ்ட்ரோத்தானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து உடனடியாக பெங்களூர் புறப்பட்டுச் சென்றார்.

இன்று மதியம் மருத்துவமனைக்கு சென்ற அவர், சத்யநாராயண ராவை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். மேலும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மற்றும் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தற்போது சத்யநாராயண ராவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் மெல்ல குணமடைந்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மருத்துவமனையில் ரஜினிகாந்த் தனது சகோதரரை பார்த்து சென்ற வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ரஜினிகாந்த்தின் திரைப்பயணமும் அடுத்தடுத்த படங்கள் குறித்த எதிர்பார்ப்புகளுடன் பரபரப்பாக உள்ளது. சமீபத்தில் வெளியான அவரது 'ஜெயிலர் 2' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், உலகம் முழுவதும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி அடைந்தது. இதுவரை எந்தவொரு தமிழ் படமும் செய்யாத வசூல் சாதனையை அது படைத்தது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் ரஜினிகாந்த்தின் நடிப்பும், அனிருத்தின் இசையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து வெளியான இரண்டாம் பாகம், ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வெற்றியை பெற்றது.

'ஜெயிலர் 2' வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 173வது திரைப்படமாக தர்மன் உருவாகிறது. நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தை டிராகன் புகழ் அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்குகிறார். ரஜினியின் சமீபத்திய படங்களை போல இதற்கும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+