‛‛6 மாதம்’’..ராமர் சிலைக்காக என்னையும்,குழந்தைகளையும் பிரிந்த அருண் யோகிராஜ்! சிற்பி மனைவி உருக்கம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: அயோத்தி ராமர் கோவில் கருவறையில் கர்நாடகா சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய 5 வயது பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சிலை செய்வதற்காக கடந்த 6 மாதமாக அருண் யோகிராஜ் தனது மனைவி, குழந்தைகளை பிரிந்து இருந்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட 2019ல் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து ஸ்ரீராம ஜென்ம தீர்த்த சேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அதன் பிறகு 2020ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பிரமாண்டமாக கோவில் கட்டப்பட்டுள்ளது.

Ram Lalla sculptor Arun Yogiraj stays away with me last 6 month, says his wife and when he return form ayodhya

கோவில் கட்டும் பணி இன்னும் முடிவடையவில்லை. இருப்பினும் முதல் தளத்துக்கான பணி முழுவதுமாக முடிவடைந்துவிட்டது. இதையடுத்து கடந்த 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பிரதமர் மோடி அதில் பங்கேற்று கோவில் கருவறையில் நிறுவப்பட்ட 5 வயது பால ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார்.

இதையடுத்து 23ம் தேதி முதல் அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது தினமும் கோவிலில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கோவில் கருவறையில் 51 இன்ச் உயரத்தில் 200 கிலோ எடையுடன் சிரித்த முகத்துவுடன் குழந்தை ராமர் அருள் பாலிக்கிறார்.

இந்த சிலையை கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செய்தார். ராமர் சிலையை சுற்றிய அலங்காரத்தில் விஷ்ணுவின் 10 அவதார வடிவங்கள் இடம்பெற்றுள்ளது. சங்கு, சக்கரம், தாமரை, கதை, பிரணவம், சுவத்திகம், போன்ற சிற்பங்களும், நவகிரங்களான சூரியன், புதன், சுக்கிரன், குரு, ராகு கேது, வெள்ளி, சந்திரன், செவ்வாய், சனி உள்ளிட்டவற்றின் சிற்பங்கள் உள்ளன. மொத்தத்தில் இந்த சிலை என்பது பக்தர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது.

இந்நிலையில் தான் கும்பாபிஷேகத்தையொட்டி சிற்பி அருண் யோகிராஜ் அவரது மனைவி விஜிதாவை 6 மாதம் பிரிந்து தீவிரமாக பணியாற்றியது தெரியவந்துள்ளது. இதுபற்றி அவரது மனைவி விஜிதாதாவே கூறியுள்ளார். அதாவது கும்பாபிஷேகம் முடிந்த பிறகு அருண் யோகிராஜ் விமானம் மூலம் அயோத்தியில் இருந்து பெங்களூர் வந்திறங்கினார். அப்போது அவரை வரவேற்க வந்த மனைவி விஜிதா கூறியதாவது:

‛‛என் கணவர் கடந்த 6 மாதங்களாக நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இருப்பினும் சவால்களை சமாளித்து அவர் வெற்றி பெற்றுள்ளார். என்னைவிட்டு 6 மாதங்களாக அவர் விலகி இருந்தார். இந்த சமயத்தில் குழந்தைகளை தனியாக கவனிப்பது என்பது எனக்கு கடினமாக இருந்தது. எங்களிடம் தற்போது எதிர்காலத் திட்டங்கள் எதுவும் இல்லை'' என்றார்.

அதாவது அருண் யோகிராஜ் மட்டுமின்றி மேலும் 2 பேரும் ராமர் சிலையை வடித்தனர். இதில் அருண் யோகிராஜ் சிலை தான் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை சார்பில் தேர்வு செய்யப்பட்டது. இந்த சிலை வடிப்பு பணியில் அவர் கடந்த 6 மாதங்களாக மிகவும் கவனமாக வேலை செய்து வந்தார். மனைவியை பிரிந்து அயோத்தியில் தங்கி சிலை செதுக்கினார். அதனை தான் அவரது மனைவி விஜிதா இப்படி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+