அதிரடி காட்டிய என்ஐஏ.. ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் மேலும் ஒருவர் கைது.. திடுக் தகவல்
பெங்களூர்: பெங்களூரில் நடந்த ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக முக்கிய நபரை என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள இந்த நபர் இதற்கு முன்பு லஷ்கர் இ-தொய்பபா பயங்கரவாத அமைப்பு தொடர்பான வழக்கில் சிறைக்கு சென்றார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் ராமேஸ்வரம் கஃபே எனும் பிரபலமான உணவகம் உள்ளது. கடந்த மார்ச் 1ம் தேதி திடீரென்று இந்த கஃபேவில் குண்டு வெடித்தது. ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என மொத்தம் 9 பேர் காயமடைந்தனர்.

இதுபற்றி பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு இந்த வழக்கு என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது.
தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்பட பல மாநிலங்களில் மொத்தம் 29க்கும் அதிகமான இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த வழக்கில் பயங்கரவாதிகள் முசாவீர் ஹுசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மதீன் அகமது ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இவர்கள் 2 பேரும் மேற்கு வங்க மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர். தற்போது வரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அப்துல் மதீன் 2020ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு முக்கிய இந்து தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்படாமல் தப்பித்தார். தேடப்பட்ட நபராக இருந்த அப்துல் மதீன் கோவை, மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் நீண்ட காலம் தங்கியிருந்த நிலையில் பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் சிக்கினார்.
இந்நிலையில் தான் ராமேஸ்வரம் கஃபே வழக்கில் இன்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவில் உள்ள தார்வார் மாவட்டம் உப்பள்ளியை சேர்ந்த சோயிப் அகமது மிர்சா என்ற சோட்டு (வயது 35) என்பவரை என்ஐஏ அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். இவர் லஷ்கர் இ-தொய்பா பயங்கவரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்த வழக்கில் இருந்து ஜெயிலில் இருந்த வந்த சோயிப் முகமது மிர்சாவுக்கு, தீவிரவாத அமைப்புகளுக்கு ஆன்லைனில் ஆட்களை சேர்க்கும் அப்துல் மதீன் என்பவருடன் கடந்த 2018ல் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு இ-மெயில் விபரங்களை அவர்கள் பகிர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர். அப்துல் மதீன், முசாவீர் உசேன் சாஹிப் என்ற கூட்டாளியுடன் கடந்த ஏப்ரல் 12ம் தேதி கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது சோயிப் அகமது மிர்சா கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications