கணவன் உயிரை காப்பாற்ற போராடிய மனைவி.. ஆர்சிபி கொண்டாட்டத்தில் சோகம்.. கதற வைக்கும் வீடியோ
பெங்களூர்: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலால் மயக்கம் அடைந்த கணவனின் உயிரை காப்பாற்ற மனைவி போராடிய காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் 2025 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு கர்நாடக அரசு நடத்திய பிரம்மாண்ட பாராட்டு விழா துயரத்தில் முடிந்தது. மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் உட்பட 11 பேர் இதுவரை உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

கூட்ட நெரிசலில் உயிரிழப்பு - கர்நாடக அரசு விசாரணை
18 வருட காத்திருப்புக்குப் பிறகு RCB அணி முதல் இந்தியன் பிரீமியர் லீக் பட்டத்தை வென்றதைக் கொண்டாடும் வகையில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தது. அனுமதிக்கப்பட்ட டிக்கெட் மற்றும் பாஸ் வைத்திருந்தவர்களை விட, அணியின் வீரர்களைக் காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டனர். அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்ட முதற்கட்ட தகவலின்படி, மைதான வளாகத்திற்கு அருகிலுள்ள வடிகால் மீது அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கான்கிரீட் தளம் மீது அதிகப்படியான மக்கள் நின்றதால் இடிந்து விழுந்தது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த சம்பவம் குறித்து அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உயிரிழப்புகளை உறுதிப்படுத்தினார். நான் இப்போது எதையும் உறுதிப்படுத்த முடியாது. நான் மைதானத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். நிறைய ரசிகர்கள் உணர்ச்சிவசமாக இருக்கிறார்கள்... நாங்கள் 5,000 வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி இருந்தோம், என்று அவர் பேட்டியில் தெரிவித்தார்.
கொண்டாட்டங்களுக்காக மைதானத்திற்கு வெளியே கூட்டம் அதிகரித்ததால், ரசிகர்களை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர். காயமடைந்தவர்கள் மருத்துவ உதவிக்காக விரைந்து கொண்டு செல்லப்பட்டனர். முன்னதாக, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சின்னசாமி மைதானம் மற்றும் விதான சவுதா அமைந்துள்ள மத்திய வணிகப் பகுதிக்கு வாகன ஓட்டிகள் வருவதை தவிர்க்குமாறு பெங்களூரு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியிருந்தது.
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL), கியூபன் பார்க் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் விதான சவுதா மெட்ரோ நிலையங்களில் மாலை 4:30 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை சேவைகளை நிறுத்தி வைத்தது.
🚨 At least 7 dead and 15 injured after a stampede-like situation near Bengaluru’s Chinnaswamy stadium. 💔
— Indian Tech & Infra (@IndianTechGuide) June 4, 2025
Avoid large crowds in all occasions. pic.twitter.com/yXkMomhPpJ
காங்கிரஸ் அரசை குறை சொல்லும் பாஜக
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மயக்கம் அடைந்த கணவனின் உயிரை காப்பாற்ற மனைவி போராடிய காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. ஐந்தே வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கணவனுக்கு சிபிஆர் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த துயர சம்பவம் அரசியல் மோதலாக மாறியது. பாஜக காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசின் மோசமான திட்டமிடல் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாக குற்றம் சாட்டியுள்ளது.
பாஜகவின் கர்நாடக பிரிவு எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "காங்கிரஸ் அரசின் பொறுப்பற்ற தன்மையால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். கூட்டத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்தவித அடிப்படை ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. அப்பாவி மக்கள் இறந்தபோது, முதலமைச்சர் சித்தராமையாவும், துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரும் கிரிக்கெட் வீரர்களுடன் புகைப்படம் எடுத்து விளம்பரம் தேடினர். இது ஒரு அலட்சியம். காங்கிரஸ் அரசின் கைகளில் இரத்தம் படிந்துள்ளது" என்று கூறி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications