ஆணாக நடித்த நடிகை.. வாக்கிங் போன போது கைவரிசை காட்டிய டிரைவர்! மொத்தம் 27 லட்சமாமே! ரோலக்ஸ் மிஸ்ஸிங்
பெங்களூர்: பொம்மலாட்டம், கோச்சடையான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகையும், பிரபல பரதநாட்டிய கலைஞருமான ருக்மணி விஜயகுமாரிடமிருந்து 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரங்கள், ரோலக்ஸ் கடிகாரம் உள்ளிட்டவற்றை திருடிய டாக்சி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். நடைப்பயிற்சிக்கு சென்றபோது சின்னசாமி மைதானம் அருகே இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பிரபல பரதநாட்டிய கலைஞர் ருக்மணி விஜயகுமார். பஜ்ரக்கி படட்தின் மூலம் சினிமாவில் நுழைந்தவர். சிறுவயதிலிருந்தே நடனத் துறையில் புகழ் பெற்றவர். தொடர்ந்து அவரது திறமையை பார்த்த பாரதிராஜா பொம்மலாட்டம் படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார்.
தமிழில் முதல் படத்திலேயே நானா படேகர் போன்ற ஜாம்பவானுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. கூத்து கலையில் இருந்து சினிமா துறையில் புகழ்பெறும் நடிகை கேரக்டரில் அவர் நடித்திருந்தார். மேலும் முதல் படத்திலேயே ஆண் கதாபாத்திரத்தை ஏற்று அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதற்குப் பிறகு தொடர்ந்து ஆனந்த தாண்டவம், கோச்சடையான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அதற்கு பிறகு சினிமா துறையில் தலை காட்டாத அவர் நடன துறையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் நடன கலைஞர் என்பதால் எப்போதும் பிட்னஸ் ஆக இருக்க வேண்டும் என்பது நடிகை ருக்மணியின் எண்ணம். இதற்காக தினமும் புகழ்பெற்ற பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கமாம்.
அந்த வகையில் கடந்த 11ஆம் தேதி காலை சின்னசாமி மைதானத்தில் வாயிலில் தனது காரை நிறுத்திவிட்டு நடை பயிற்சிக்கு சென்றிருக்கிறார். அப்போது அருகில் இருந்த டாக்ஸி ஓட்டுனரான மஸ்தான் என்பவர் காரில் இருந்த கைப்பை, பணம், இரண்டு வைர மோதிரங்கள், ரோலக்ஸ் கடிகாரம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு 23 லட்சம் ரூபாய் என்கின்றனர் போலீசார்.
இந்த நிலையில் தனது பொருட்கள் காணாமல் போனது குறித்து நடிகை ருக்மணி கப்பன் பார்க் போலீசில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது காரை ருக்மணி பூட்டாமல் சென்றதும் அதனை கவனித்த ஓட்டுனர் அதனை திருடி சென்றதும் தெரிய வந்தது. கைப்பற்றப்பட்ட ஹேண்ட் பேக்கின் விலை ஒன்றரை லட்சம் ரூபாய் என்றும், ரோலக்ஸ் கடிகாரத்தின் மதிப்பு 9 லட்சம் ரூபாய் வைர மோதிரத்தின் மதிப்பு 10 லட்சம் ரூபாய் என்கின்றனர் போலீசார்.












Click it and Unblock the Notifications