பெங்களூருவில் பட்டபகலில் சொகுசு காரின் கண்ணாடியை உடைத்து பாய்ந்த நபர்.. நடந்ததை நீங்களே பாருங்க
பெங்களூரு: பெங்களூரு நகரின் சர்ஜாபூர் பகுதியில் பட்டப்பகலில் பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த பிஎம்டபிள்யூ காரின் கண்ணாடியை உடைத்த கொள்ளையர்கள், அதில் இருந்த ரூ.13 லட்சம் பணத்தை திருடிச் சென்றுள்ளார்கள். கொள்ளையர்கள் எப்படி திருடிச்சென்றார்கள் என்பது குறித்து சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
பெங்களூருவில், கடந்த அக்டோபர் 20ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சர்ஜாபூர் பகுதியில் ஆனேக்கல் தாலுகாவைச் சேர்ந்த பாபு என்பவர் பிஎம்டபிள்யூ காரை நிறுத்திவிட்டு வெளியில் சென்றுள்ளார். அப்போது பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்த திருடர்கள் இரண்டு பேர், நின்று கொண்டிருந்த பிஎம்டபிள்யூ காரின் கண்ணாடியை உடைத்து ரூ.13 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பின்னர் அங்கு வந்த காரின் உரிமையாளர் பணத்தை காணாது திடுக்கிட்டார். அவர் உடனடியாக சர்ஜாபூர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்தனர்.
பட்டப் பகலில், ஆள் நடமாட்டமுள்ள பகுதியில் கார்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் பாபுவின் பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 கார் நின்று கொண்டிருந்தது. அப்போது ஹெல்மெட்டுடன், முகக் கவசம் அணிந்தபடி அருகில் சென்ற கொள்ளையன் காரின் பின்புறம் தயாராக நின்று கொண்டிருந்தார். இன்னொரு கொள்ளையன் எதார்த்தமாக காரின் டிரைவர் சீட் கதவுக்கு அருகில் போய் நிற்பது போல் நின்றார்.
பின்னர் சுற்றி முற்றும் பார்த்துவிட்டு கார் அருகில் நின்ற கொள்ளையன், திடீரென கார் கதவு கண்ணாடியை உடைத்து, தலையை காரின் உள்ளே நுழைத்து பணம் வைக்கப்பட்டிருந்த கவரை எடுத்துக்கொண்டு இறங்கினான். பின்னர் இருசக்கர வாகனத்தில் தயாராக இருந்த மற்றொரு கொள்ளையனின் பின்னால் அமர்ந்து ஏறி மின்னல் வேகத்தில் சென்றுவிட்டான்'.
இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை.இருசக்கர வாகனம் எங்கெல்லாம் சென்றது என்பதை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த பிஎம்டபிள்யூ காரின் கண்ணாடியை உடைத்து கொள்ளையர்கள் 13 லட்சம் திருடிய சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் கொள்ளையர்களுக்கு 13 லட்சம் பணம் இந்த காரில் இருப்பது எப்படி தெரிந்தது என்ற கேள்வியும் எழுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications