பெண் பிச்சைக்காரரின் வீட்டில் சிக்கிய ரூ.3.50 லட்சம்.. அள்ள அள்ள வந்த நாணயம் - ரூபாய் நோட்டுகள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகவில் பெண் யாசகரின் வீட்டில் இருந்து மூடை மூடையாக நாணயம், ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள திவான் பூர்ணய்யா தெருவில் ஐயப்பா சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின்புறத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார் சாவித்ரி. இவருடன் தாய் பார்வதம்மா வசித்து வந்தார். இவர்கள் 2 பேரும் பிச்சை எடுத்து தான் பிழைப்பு நடத்தி வந்தனர்.

rs-3-50-lakhs-cash-found-in-beggar-house-in-mandya

சமீபத்தில் பார்வதம்மா இறந்துபோனார். இதனால் சாவித்ரி மட்டும் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக சாவித்ரி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதுபற்றி தொண்டு நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

ஜோதிடர் பானு பிரகாஷ் தலைமையிலான தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சாவித்ரியின் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அவரது வீடு குப்பையாக இருந்தது. பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. அழுக்கு துணிகள் அதிகமாக இருந்தது. இந்த அழுக்கு துணிகளுககு நடுவே சாவித்ரி படுத்து கிடந்தார்.

அவரை தொண்டு நிறுவனத்தினர் மீட்டனர். அப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். உடனடியாக அவரை அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது சாவித்ரி நலமாக உள்ளது. இதற்கிடையே தான் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சாவித்ரியின் வீட்டை சுத்தம் செய்தனர்.

அப்போது துணிகள் மற்றும் உண்டியல்களில் ஏராளமாக நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதனை பார்த்து ஷாக்காகி போனவர்கள் அந்த நாணயம், பணத்தை எண்ணிப்பார்த்தனர். மொத்தம் ரூ.3.50 லட்சம் வரை இருந்தது தெரியவந்தது. இதுபற்றி சமூக சேவகர் பானு பிரகாஷ் கூறுகையில், ''சாவித்ரியின் வீட்டில் இருந்து மொத்தம் ரூ.3.50 லட்சம் கிடைத்துள்ளது. இதனை அவரது பெயரில் வங்கியில் செலுத்தப்படும்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+