அய்யய்யோ! இப்படியா வதந்தி கிளப்புறது? ஜெனிவாவில் நலமுடன் இருக்கிறார் நடிகை "குத்து" ரம்யா!
பெங்களூர்: நடிகை திவ்யா ஸ்பந்தனா என்ற குத்து ரம்யா மிகவும் நலமுடன் ஜெனிவாவில் இருப்பதாகவும் நாளை இந்தியா திரும்புவார் எனவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கர்நாடகா திரை உலகில் 2003-ம் ஆண்டு அபி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அப்படத்தின் நாயகன் புனித் ராஜ்குமார். 2004-ம் ஆண்டு குத்து தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். இதனால் "குத்து ரம்யா" எனவும் அழைக்கப்பட்டார்.

தென்னிந்தியாவின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா என்ற குத்து ரம்யா. பின்னர் அரசியலில் குதித்தார் நடிகை திவ்யா ஸ்பந்தனா. 2012-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை திவ்யா, 2013-ல் கர்நாடகாவின் மாண்டியா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு லோக்சபா எம்.பி.யானார். ஆனால் 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார் நடிகை திவ்யா.
I just spoke to @divyaspandana She’s well. En route to Prague tomorrow and the to Bangalore.
— Chitra Subramaniam (@chitraSD) September 6, 2023
2019-ம் ஆண்டு காங்கிரஸில் பொறுப்புகளில் இருந்து நடிகை திவ்யா விலகினார். ஆனால் அண்மையில் நடைபெற்ற கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸின் நட்சத்திர பேச்சாளராக பிரசாரம் செய்தார். தமக்கு மிகவும் நெருக்கடியான தருணங்களில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எப்படி எல்லாம் உதவியாக இருந்தார் என்பதை நடிகை திவ்யா உருக்கமாக தெரிவித்திருந்தது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
Wonderful meeting the very talented and genteel lady @divyaspandana for dinner in Geneva. We talked about many things including our love for Bangalore. 💫 pic.twitter.com/1kN5ybEHcD
— Chitra Subramaniam (@chitraSD) September 6, 2023
இந்நிலையில் திடீரென இன்று நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு மாரடைப்பு என்றும் அவர் இறந்துவிட்டார் என்றெல்லாம் வதந்தி கிளம்பியது. ஆனால் இந்த தகவல் வதந்தி என பரவியதால் ஊடகங்கள் இந்த செய்தியை நிறுத்திவிட்டன.
இதனிடையே நடிகை திவ்யா ஸ்பந்தனா ஜெனீவாவில் இருப்பதாகவு நாளை அவர் இந்தியா திரும்புவார் எனவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications