"கிரிஞ்ச்.." கைகளில் சாப்பிடுவது, லேட்டாக வருவது! இந்தியர்களின் 8 பழக்கங்கள்.. ரஷ்ய பெண் சொன்ன மேட்டர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் வசிக்கும் இந்தியரைத் திருமணம் செய்து கொண்ட ரஷ்யப் பெண் ஒருவர், உலகின் பிற பகுதிகளில் கிரிஞ்சாக கருதப்படும் சில இந்தியப் பழக்க வழக்கங்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவரது இந்தப் பட்டியல் இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், இது குறித்து நெட்டிசன்களும் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியர்கள் பலரும் ஒவ்வொரு ஆண்டும் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பாகப் பல லட்சம் பேர் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். அவர்களில் கணிசமானோர் வெளிநாடுகளிலேயே செட்டிலும் ஆகிவிடுகிறார்கள். அதேபோல வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் சிலர் இந்தியர்களில் வசித்து வருகிறார்கள்.

Russian Woman s Viral Video Lists Indian Habits She Now Finds Normal

ரஷ்யப் பெண்

அப்படி பெங்களூரில் வசித்து வரும் ரஷ்யா நாட்டு பெண் தான் யூலியா. இவர் இந்தியர் ஒருவரைத் திருமணம் செய்ததால் இப்போது பெங்களூரில் வசித்து வருகிறார். இந்தியாவில் முதலில் தனக்கு ஆச்சரியமாக இருந்த இந்தியப் பழக்கவழக்கங்கள் எட்டு இப்போது எப்படித் தனது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்பது குறித்து வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

கிரிஞ்ச்

இந்த 8 பழக்கவழக்கங்கள் சில நேரங்களில் வெளியாட்களால் வித்தியாசமாகக் காணப்பட்டாலும், தனது வாழ்க்கைக்கு வசதியையும் மகிழ்ச்சியையும் தருவதாக அவர் கூறினார். அவர் முதலில் குறிப்பிட்டது மாமியார்- மாமனாருடன் வாழ்வதைத் தான் குறிப்பிட்டுள்ளார். முதலில் இது வித்தியாசமாக இருந்தாலும் இப்போது அதை ஒரு ஆசீர்வாதமாகக் கருதுவதாகக் குறிப்பிடுகிறார்.. யூலியா அந்த வீடியோவில் மொத்தம் 8 விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளார். அவை வெளிநாடுகளில் கிரிஞ்சாக இருந்தாலும் இந்தியாவில் தனது வாழ்க்கையை ஈஸியாக மாற்றியுள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

எட்டு விஷயங்கள்

  • மாமியார், மாமனார் உடன் சேர்ந்து வாழ்வது ஒரு ஆசீர்வாதம்.
  • கைகளால் சாப்பிடுவது மிகவும், மிகவும் சுவையாக இருக்கும்!
  • கொஞ்சம் தாமதமாக வருவது பரவாயில்லை. மக்கள் 15-20 நிமிடங்கள் தாமதமாக வருவது எனக்கு ஓகே. நான் எனது சந்திப்புகளை அதற்கேற்பத் திட்டமிடுகிறேன்.
  • எல்லாவற்றுக்கும், குறிப்பாக வீட்டு வேலைக்கு உதவியாளர்கள் இருக்கிறார்கள்
  • ஒரே நேரத்தில் சில மொழிகளைப் பேசுவது. அதாவது ஹிங்கிலிஷ் பேசும்போதும் அர்த்தம் புரிகிறது.
  • எல்லாவற்றுக்கும் பேரம் பேசுவது எப்போதும் நடக்கும் ஒன்று. உண்மையில் இந்தியாவில் தான் வியாபாரம், பேச்சுவார்த்தை பற்றி நிறைய கற்றுக்கொண்டேன்.
  • டீ சாப்பிடுங்க.. பால் மற்றும் மசாலாவை சேர்ந்து மசாலா டீயை குடிக்கலாம்.
  • வாழ்க்கையே காதலுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக இருக்கும். ஒவ்வொரு சினிமா, ஒவ்வொரு பிரச்சனை என எல்லாமே காதலைச் சுற்றியே இருக்கிறது.

நெட்டிசன்கள் சொல்வது என்ன

இந்த வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. சுமார் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வியூஸை இந்த வீடியோ பெற்றுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள். பெரும்பாலான யூசர்கள் அவரது கருத்துக்கு உடன்படும் வகையிலேயே கருத்து கூறியுள்ளனர். ஒருவர் தனது ட்விட்டரில், "முதல் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் நான் ஆதரிக்கிறேன். முதல் விஷயம் (மாமனார்- மாமியாருடன் வாழ்வது) ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம்" என்று பதிவிட்டுள்ளார்.

இன்னொரு நபர், "உங்கள் கருத்துக்கள் முற்றிலும் சரி.. பலர் மாமியாரைப் பற்றி புகார் கூறினாலும், புரிந்து கொள்ளும் சில மாமியார் இருக்கிறார்கள், அவர்கள் தலைமுறை தலைமுறையாக வரும் கஷ்டங்களை உங்களுக்குக் கடத்த மாட்டார்கள்" என்று பதிவிட்டுள்ளார். யூலியா ரஷ்யாவில் தனது வேலையை விட்டுவிட்டு 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+