பெங்களூரை இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப துறை தலைநகராக உருவாக்கிய சிற்பி எஸ்.எம்.கிருஷ்ணா!
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூரை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகராக- அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு போல உருமாற்றிய சிற்பிதான் மறைந்த கர்நாடகா முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா. உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெங்களூர் நோக்கி படையெடுக்கும் வகையில் சாதகமான சூழ்நிலைகளை தாம் முதல்வராக பதவி வகித்த காலத்தில் உருவாக்கி இருந்தார் எஸ்.எம். கிருஷ்ணா.
கர்நாடகா மாநிலத்தின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவர் எஸ்.எம்.கிருஷ்ணா. 60 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடகாவின் அரசியல் முகங்களில் ஒருவராக கோலோச்சியவர்.

கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் பிறந்த எஸ்.எம்.கிருஷ்ணா, சட்டம் பயின்றார். பின்னர் அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்தார். 1962-ம் ஆண்டு கர்நாடகாவின் மத்தூர் சட்டசபை தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வென்றார். அந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சங்கர் கவுடாவை ஆதரித்து ஜஹவர்லால் நேரு ஆதரித்து பிரசாரம் செய்தார். அன்று எஸ்.எம்.கிருஷ்ணா என்ற சுயேட்சையின் வெற்றி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இதனைத் தொடர்ந்து பிரஜா சோசலிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் எஸ்.எம்.கிருஷ்ணா. 1968-ம் ஆண்டு மண்டியா லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து நாடாளுமன்றத்தில் கால் பதித்தார் எஸ்.எம்.கிருஷ்ணா. பின்னர் எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரஸ் பிரமுகரானார்.
1972-ம் ஆண்டு மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்பிய எஸ்.எம்.கிருஷ்ணா, முதல்வராக இருந்த தேவராஜ் அர்ஸ் அமைச்சரவையில் இடம்பெற்றார். 1980-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் எம்.பி.யான எஸ்.எம்.கிருஷ்ணா, பிரதமராக இருந்த இந்திரா காந்தி அமைச்சரவையில் இடம்பிடித்தார். ஆனால் 1984-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் எஸ்.எம்.கிருஷ்ணா தோல்வியைத் தழுவினார்.
1985-ம் ஆண்டு கர்நாடகா சட்டசபை தேர்தலில் வென்று எம்.எல்.ஏ.வானார். 1989-1993-ம் ஆண்டு கர்நாடகா சட்டசபை சபாநாயகராகவும் பதவி வகித்தார். 1993-94-ல் கர்நாடகாவின் துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டார் எஸ்.எம்.கிருஷ்ணா. 1996-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு ராஜ்யசபா எம்பியாக பணியாற்றினார்.
1999-ம் ஆண்டு கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற போது அம்மாநிலத்தின் முதல்வரானார் எஸ்.எம்.கிருஷ்ணா. அப்போது கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்தார் கிருஷ்ணா. இந்த கால கட்டத்தில்தான் பெங்களூர் மாநகரை நோக்கி உலகின் அனைத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் படையெடுத்தன. அமெரிக்காவில் சிலிக்கான் பள்ளத்தாக்கு எப்படி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மையமாக இருக்கிறதோ அதேபோல இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என பெங்களூர் மாநகரம் புகழ் பெற காரணமாகவும் இருந்தவர் எஸ்.எம். கிருஷ்ணா.
இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என பெங்களூர் மாநகரம் உருமாறிய பின்னர்தான், காஸ்ட்லியான நகரங்களில் ஒன்றாகவும் பெங்களூர் மாறியது; பெங்களூரின் ரியல் எஸ்டேட் துறை அதீதமான பெருவளர்ச்சியை நோக்கி பாய்ந்தது.
எஸ்.எம். கிருஷ்ணா, கர்நாடகா முதல்வராக பதவி வகித்த போதுதான் சந்தனக் கடத்தல் வீரப்பனால் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் கடத்தப்பட்டார். அப்போது தமிழ்நாடு முதல்வராக இருந்த கருணாநிதியுடன் இணைந்து செயல்பட்டு ராஜ்குமாரை பாதுகாப்பாக மீட்டார்.
கர்நாடகா முதல்வர் பதவிக்கு பின்னர் மகாகாராஷ்டிரா மாநில ஆளுநராகவும் பதவி வகித்தார் எஸ்.எம்.கிருஷ்ணா. 2008-ம் ஆண்டு ராஜ்யசபா வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.எம்.கிருஷ்ணா, மன்மோகன் சிங் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்தார்.
2017-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடனான பல்லாண்டுகால உறவை துண்டித்துக் கொண்டு பாஜகவில் ஐக்கியமானார் எஸ்.எம்.கிருஷ்ணா. 2023-ம் ஆண்டு எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. பின்னர் தீவிர அரசியலில் இருந்தே ஓய்வு பெற்றுவிட்டார் எஸ்.எம்.கிருஷ்ணா.
கர்நாடகாவின் முன்ணி நிறுவனமான காஃபி டேவின் உரிமையாளரான தற்கொலை செய்து கொண்ட சித்தார்த்தா, எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன். எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள், மாளவிகாவை சித்தார்த்தா திருமணம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications