Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பணத்தை அள்ளி அள்ளி கொடுத்த சரோஜா தேவி.. இறப்பதற்கு முன்பு ‛கன்னட பைங்கிளி' நெகிழ்ச்சி செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழம்பெருமை நடிகை சரோஜா தேவி தனது 87 வது வயதில் நேற்று காலமானார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நல பிரச்சனையால் அவரது உயிர் பிரிந்தது. இந்நிலையில் தான் இறப்பதற்கு முன்பு சரோஜா தேவி பணத்தை அள்ளி அள்ளி கொடுத்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் சரோஜா தேவி. இவர் மைசூரில் கடந்த 1938ம் ஆண்டு ஜனவரி 7 ம் தேதி பிறந்தார். ‛கன்னட பைங்கிளி' என்ற புனைப்பெயருடன் அழைக்கப்பட்டார்.

saroja-devi-donated-money-and-building-for-various-education-and-medical-institution-before-her-died

இவர் தமிழில் 1956ம் ஆண்டு வெளியான திருமணம் என்ற நடிகர் ஜெமினி கணேஷன் படத்தில் அறுிமுகம் ஆனார். இவர் நடிகர் எம்ஜிஆர், சிவாஜி கணேசனுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

தனது நடிப்பு மூலம் சரோஜா தேவி தமிழ் மக்களை கவர்ந்தார். சரோஜா தேவி பெங்களூர் மல்லேஸ்வரத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் தான் அவர் தனது 87 வது வயதில் நேற்று காலமானார். வயது முதிர்வு காரணமாகவும், உடல்நல பிரச்சனைகளாலும் அவர் சினிமாவில் இருந்து விலகி வீட்டில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் தான் வயது முதிர்வால் ஏற்படும் உடல் உபாதையால் அவரது உயிர் நேற்று பிரிந்தது.

இந்நிலையில் தான் சரோஜா தேவி இறப்பதற்கு முன்பாக பணத்தை அள்ளி அள்ளி கொடுத்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவர் மறைவதற்கு முன்பு கல்வி நிறுவனங்களுக்கு வகுப்பறை கட்டடங்கள் மற்றும் நன்கொடைகளை வாரி வழங்கி உள்ளார். அதன்படி தாய் ருத்ரம்மா நினைவாக அவரது சொந்த ஊரான தஸ்வராவில் உள்ள தொடக்க பள்ளியை கட்டி கொடுத்தார். அதேபோல் தாயின் நினைவாக பெங்களூர் மவுண்ட் கார்மல் கல்லூரிக்கு நன்கொடை வழங்கினார்.

கணவர் ஸ்ரீஹர்சா நினைவாக பெங்களூர் பூர்ணபிரஜ்னா பள்ளிக்கு கம்ப்யூட்டர் ஆய்வகம், மல்லேஸ்வரத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான Cluny கான்வென்ட்டுக்கு வகுப்பறைகளை கட்டி கொடுத்தார். அதேபோல் கணவர் ஸ்ரீஹர்சா நினைவாக பெங்களூர் பல்கலைக்கழத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மாணவர்களுக்கு தங்க மடல் மற்றும் ஸ்காலர்ஷிப் வழங்கினார். பெங்களூர் ஜெயதேவா இதயவியல் மருத்துவமனை, கன்னட சாகித்ய பரிஷத் அமைப்பு, மெட்ராஸ் புற்றுநோய் மருத்துவனைகளுக்கும் நன்கொடைகளை வழங்கினார்.

கடந்த 2004ம் ஆண்டு அவர் படித்த செயின்ட் தெரசா பள்ளிக்கு ஏழை மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கினார். 2005ம் ஆண்டில் சுனாமி பொது நிவாரண நிதிக்காக தமிழ்நாடு முதல்வர் நிவார நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கினார். கணவர் ஸ்ரீஹர்சா நினைவாக கடந்த 2008 ம் ஆண்டில் சென்னை மருத்துவ ஆராய்ச்சி பவுண்டேஷனுக்கு நன்கொடை வழங்கினார்.

2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெங்களூர் அக்சயா பாத்ரா பவுண்டேஷன் இஸ்கான் கோவிலுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார். 2020ல் கொரோனா பரவிய சமயத்தில் கர்நாடகா முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கினார். அதேபோல் 2021 மே மாதம் கொரோனா 2ம் அலை பரவியபோது UPPI பவுண்டேஷனுக்கு ரூ. 4 லட்சம் நன்கொடை வழங்கினார். 2021 செப்டம்பர் மாதம் கர்நாடகாவின் சுள்ளியாவில் உள்ள குக்கே சுப்பிரமணிய கோவிலின் ஸ்ரீநிகேதன அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார்.

இதுதவிர பல்வேறு காலக்கட்டங்களில் அவர் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கு நன்கொடை வழங்கினார். இந்த நன்கொடைகளை அவர் தனது தாய் ருத்ரம்மா, கணவர் ஸ்ரீஹர்சா மற்றும் மகள் புவனேஸ்வரி ஆகியோரின் நினைவாக வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+