கொரோன பீதி.. சசிகலா ஜாமீனில் விடுதலை இல்லை.. சிறைத்துறை அதிகாரி திட்டவட்ட மறுப்பு
பெங்களூரு: கொரோனா வைரஸ் பீதி காரணமாக சசிகலா ஜாமீனில் விடுதலை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் பரவியது. இந்த தகவலை சிறைத்துறை அதிகாரி திட்டவட்டமாக மறுத்துள்ளார். சசிகலா ஜாமினில் விடுதலை இல்லை என்றார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர அனுமதி இல்லை.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா உள்பட கர்நாடகாவில் உள்ள அனைத்து சிறைகளிலும் கைதிகளை பார்க்க அனுமதி இல்லை என அம்மாநில சிறைத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பீதியால் சிறிய சிறிய குற்றங்கள் செய்தவர்கள், சில விசாரணை கைதிகள் நாடு முழுவதும் சொந்த ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் கொரோனா பீதியால் சிறையில் உள்ள சசிகலா ஜாமீனில் விடுதலை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைத்துறை அதிகாரி மறுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பீதியால் சசிகலா உள்பட எந்த ஒரு தண்டனை கைதியும் ஜாமினில் விடுவிக்கப்பட முடிவு இல்லை. இது தொடர்பாக வரும் தகவல்கள் உண்மையில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications