பெங்களூரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் சசிகலா... அமமுகவினர் உற்சாகம்!
பெங்களுரு: கொரோனா காரணமாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்து சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
Recommended Video

பெங்களூரில் வீட்டில் சசிகலா தங்கியிருப்பார். இன்னும் சில தினங்களில் அவர் கார் மூலம் சென்னை செல்வார் என்று கூறப்படுகிறது.
சசிகலா டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டபோது அங்கு கூடியிருந்த அமமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

கொரோனா பாதிப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா உடல்நலக் குறைவு காரணமாக ஜனவரி 20-ஆம் தேதி பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். முதலில், பவுரிங் அரசு மருத்துவமனையிலும், பிறகு விக்டோரியா அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

தீவிர சிகிச்சை
முதலில் ஆக்சிஜன் உதவியுடன் ஐசியூவில் சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு உடல் நலம் தேறியது என்று மருத்துவமனை அறிவித்தது. மூன்று தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று முழுமையாக குணமடைந்து விட்டதாக மருத்துவமனை தெரிவித்தது. இருப்பினும் அவர் தொடர்ந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்
சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறியது. சசிகலா கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து விட்டதாக மறுத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதன்பிறகு இன்று காலை 11.45 மணியளவில் விக்டோரியா மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
அதன்பின்பு சிறிது நேரத்தில் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார் சசிகலா. அங்கு வெளியே கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களை நோக்கி அவர் மகிழ்ச்சியுடன் கையசைத்தார். சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது அங்கு கூடியிருந்த அமமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

சென்னை எப்போது செல்வார்?
அந்த மருத்துவமனை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அவருக்கு மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து பெங்களூரில் வீட்டில் சசிகலா தங்கியிருப்பார். இன்னும் சில தினங்களில் அவர் கார் மூலம் சென்னை செல்வார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications