மேலும் ஒரு வருஷம் சிறையா? சசிகலா 10 கோடி அபராதத்தை இன்னும் கட்டாததால் சிக்கல்
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வரும் சசிகலாவின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் முடிகிறது. இந்நிலையில் நீதிமன்றம் விதித்த 10 கோடி அபராதத்தை கட்டவில்லை என்றால், சசிகலா மேலும் ஓராண்டு சிறையில் இருக்க வேண்டுமாம்.
ஜெயலலிதா, சசிகலா, இளரவசி, சுதாகரன் உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து. இதில் ஜெயலலிதாவுக்கு 100 கோடி அபராதமும், சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேருக்கு 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து,

இந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அதேநேரம் ஜெயலலிதா இறந்து போனதால் அவர் பெயரை மட்டும் விடுவித்தது. ஆனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேரையும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்த தண்டனையின் படி 4 ஆண்டுகள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. 10 கோடி அபராதத்தையும் வசூலிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரு பரப்பனா அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று பேரும் இந்த மாதத்துடன் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்துவிட்டனர். இன்னும் ஓராண்டு மட்டுமே சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டி உள்ளது.
இதற்கிடையில் நீதிமன்றம் விதித்த 10 கோடி அபராதத்தை சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேரும் இதுவரை செலுத்தவில்லை என சிறை நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் சசிகலா அபராதம் செலுத்தாவிட்டால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று சொல்கிறார்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications