பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

துரோகத்திற்கு மேல் துரோகம் நடக்குது.. சசிகலா உயிருக்கு ஆபத்து.. திவாகரன் பகீர் புகார்

Google Oneindia Tamil News

பெங்களூரு: சசிகலாவுக்கு கடந்த 10 நாட்களாக சரியாக சிகிச்சை தரப்படவில்லை என்றும் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், சசிகலாவின் தம்பி திவாகரன் குற்றம்சாட்டி உள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி முதல் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்கள்.
இவர்கள் 4 பேருக்கும் தண்டனை காலமான நான்கு ஆண்டு சிறைதண்டனை விரைவில் முடிவுக்கு வருகிறது.

சசிகலா மட்டும் வரும் 27ம் தேதி அன்று விடுதலை செய்யப்பட உள்ளதாக கர்நாடக சிறை துறை அதிகாரபூர்வமாக அண்மையில் அறிவித்தது. இளவரசி பிப்ரவரி 5ம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளது. சுதகாரன் விடுதலையாகும் நாள் குறித்து தெளிவான தகவல்கள் இன்னும் வரவில்லை.

தீவிர சிகிச்சையில் உள்ள சசிகலாவுக்கு கொரோனா இல்லை.. RT-PCR பரிசோதனையிலும் உறுதி தீவிர சிகிச்சையில் உள்ள சசிகலாவுக்கு கொரோனா இல்லை.. RT-PCR பரிசோதனையிலும் உறுதி

உடல்நிலை பாதிப்பு

உடல்நிலை பாதிப்பு

இன்னும் 6 நாட்களில் சிறையில் இருந்து சசிகலா விடுதலையாக உள்ளதால் அவரது உறவினர்கள் மற்றும் அமமுகவினர் அவரை வரவேற்க பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் சசிகலாவுக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. காய்ச்சல், மூச்சுத் திணறல் இருந்ததால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சிறைத்துறை மருத்துவர்கள் பரிந்துரைத்ததாக சொல்லப்பட்டது.

பிராண வாயு

பிராண வாயு

இதற்கிடையே சசிகலாவை உடனடியாக பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள போரிங் அரசு மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்துச் சென்றார்கள். அங்கு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் சசிகலாவுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்னையுடன், சளி, காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் அவருக்கு ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சசிகலாவுக்கு ஆன்ட்டிபயாடிக் மற்றும் பிராண வாயு செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அத்துடன் சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அறிக்கையும் வெளியிட்டது.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

இதனிடையே சசிகலாவுக்கு லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மருத்துவர்கள் அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து அவசர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு சென்றனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சசிகலாவுக்கு நடத்தப்பட்ட இரண்டு பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமமுகவினர் பிரார்த்தனை

அமமுகவினர் பிரார்த்தனை

சசிகலா விடுதலையாக சில நாட்களே இருந்த நிலையில், மூச்சுத்திணறலால் தீவிர சிசிக்சை பிரிவில் சிசிச்சை பெற்று வருவது அவரது உறவினர்களை கவலைக்கு உள்ளாக்கி உள்ளது. அவரது உடல்நிலை குறித்து தெளிவான தகவல் வேண்டும் என்று கோரியுள்ளனர். இந்நிலையில் சசிகலாவின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக அவரது தம்பி திவாகரன் குற்றம்சாட்டி உள்ளார்.

சிகிச்சை தரவில்லை

சிகிச்சை தரவில்லை

இது தொடர்பாக பிரபல தமிழ் செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்த திவாகரன்,
சசிகலாவுக்கு கடந்த 10 நாட்களாக சரியாக சிகிச்சை தரப்படவில்லை. அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. எங்களுக்கு துரோகத்திற்கு மேல் துரோகம் நடக்கிறது. சசிகலாவிற்கு உடனே சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டும்:. வெறும் xray மட்டுமே எடுத்துள்ளார்கள் என்றார்கள்.

English summary
Sasikala's brother Divakaran has alleged that Sasikala has not been treated properly for the last 10 days and her life is in danger.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X