‛‛தலையை வெட்டுவேன்’’.. சித்தராமையாவை மிரட்டியவருக்கு பாஜகவில் ‛‛சீட்’’.. ஈஸ்வரப்பாவுக்கு ‛‛கல்தா’’
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் சிவமொக்கா தொகுதியில் பாஜக மூத்த தலைவரும், சிட்டிங் எம்எல்ஏவுமான கேஎஸ் ஈஸ்வரப்பாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மாறாக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் தலையை வெட்டுவேன் என மிரட்டல் விடுத்த சன்னபசப்பாவுக்கு சிவமொக்கா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பல்வேறு சிட்டிங் எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிவமொக்கா தொகுதியில் பாஜக சிட்டிங் எம்எல்ஏவான ஈஸ்வரப்பாவுக்கு சீட் மறுக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சரான ஈஸ்வரப்பா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரான சித்தராமயைாவின் குருபா சமுதாயத்தை சேர்ந்தவர். இவர் அமைச்சராக இருந்த நிலையில் ஒப்பந்தாரர் கூறிய முறைகேடு புகாரால் கடந்த ஆண்டு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து எம்எல்ஏவாக இருந்தார்.

இந்நிலையில் தான் ஈஸ்வரப்பா கடந்த ஆண்டு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு அவர் எம்எல்ஏவாக மட்டுமே தொடர்ந்து வந்தார். இந்நிலையில் தான் சிவமொக்கா தொகுதியில் ஈஸ்வரப்பாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்ற தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அவர் தான் தேர்தல் அரசியலில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கும் கடிதம் அனுப்பினார். இருப்பினும் தனது குடும்பத்தில் குறிப்பாக மகன் காந்தேசுக்கு பாஜகவில் சீட் கிடைக்கும் என ஈஸ்வரப்பா நம்பினார். ஆனால் பாஜக மேலிடம் சன்னபசப்பா என்பவருக்கு சீட் வழங்கியது. 59 வயது நிரம்பிய சன்னபசப்பா சிவமொக்கா மாநகராட்சியின் முன்னாள் துணை மேயர் ஆவார். இந்த அறிவிப்பு கடந்த 19ம் தேதி வெளியான நிலையில் நேற்று சன்னபசப்பா வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது ஈஸ்வரப்பாவும் உடன் இருந்தார்.
இந்நிலையில் தான் சிவமொக்கா பாஜக வேட்பாளர் சன்னபசப்பா பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
சன்னபசப்பா விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தளம் அமைப்பில் செயல்பட்டு வந்தார். அதன்பிறகு நகராட்சி உறுப்பினராகவும், சிவமொக்காக மாநகராட்சியின் துணை மேயராகவும் செயல்பட்டார்.

மேலும் இவர் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து இருந்ததும் தெரியவந்துள்ளது. அதாவது கடந்த 2015 நவம்பர் 2ம் தேதி மாட்டுக்கறி உணவு சாப்பிட்டது தொடர்பான விஷயத்தில் சித்தராமையாவின் தலையை வெட்டுவதாக சன்னபசப்பா மிரட்டியிருந்தார். சிவமொக்காவுக்கு வந்து சித்தராமையா மாட்டுக்கறி உணவு சாப்பிட்டால் அவரது தலை துண்டிக்கப்படும் என மிரட்டி இருந்தார்.
அந்த சமயத்தில் சித்தராமையா முதல் அமைச்சராக இருந்தார். இதுதொடர்பாக சிவமெக்காக நகர காங்கிரஸ் தலைவர் விஸ்வநாத் தொட்டபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஜாமீனில் சன்னபசப்பா வெளியே வந்தார். அதன்பிறகு அவரிடம் இருந்து பாஜக விலகியே இருந்தது. இந்நிலையில் தான் தற்போது அவருக்கு சிவமொக்கா தொகுதியில் போட்டியிட பாஜக டிக்கெட் வழங்கி உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications