மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் மொழி பிரச்சினை.. பெங்களூர் கடைகளுக்கு மாநகராட்சி போட்ட அதிரடி ஆர்டர்
பெங்களூர்: கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரில் உள்ள கடைகளுக்கு மாநகராட்சி புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பெயர் பலகைகளில் 60 % கன்னட மொழி இடம் பெறவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
தென் இந்திய மாநிலங்களில் இந்தி திணிக்கப்படுவதாக அரசியல் கட்சிகள் மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டுக்களை அவ்வப்போது முன்வைத்து வருகின்றன. தமிழ்நாட்டை போல கர்நாடகாவிலும் அவ்வப்போது இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் வெடித்து கிளம்புகின்றன. குறிப்பாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பான கர்நாடக ரக்ஷன வேதிக் அமைப்பு அடிக்கடி எதிர்ப்புகளை தெரிவிப்பதை காண முடியும்.

இந்த நிலையில் தான், கர்நாடகாவில் மீண்டும் மொழி விவகாரம் ஸ்பாட்லைட்டிற்கு வந்துள்ளது. அதாவது, கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள கடைகளில் பெயர் பலகையில் குறைந்த பட்சம் 60 சதவீதம் கன்னட மொழி இடம் பெற வேண்டும் என்ற உத்தரவை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
பிப்ரவரி வரை அவகாசம்: இந்த உத்தரவை பின்பற்றவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெங்களூர் மாநகராட்சி ஆணையர் துஷார் கிரிநாத் கூறியுள்ளார். கர்நாடக ரக்ஷன வேதிக் அமைப்பினருடன் ஆலோசனை நடத்திய பிறகு பெங்களூர் மநாகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- பெங்களூர் மாநகராட்சிக்கு உள்பட்டு 1,400 கி.மீட்டர் தொலைவுக்கு சாலைகள் அமைந்துள்ளன.
இந்த சாலைகளின் ஓரத்தில் அமைந்துள்ள அனைத்து வணிக கடைகளிலும் மண்டல வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்கு பிறகு கன்னட மொழியை குறைந்தபட்சம் 60 சதவிகிதம் அளவுக்கு பயன்படுத்தாத கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்தக் கடைகளுக்கு பெயர் பலகையில் 60 % கன்னட எழுத்துக்களை இடம் பெற வைக்க பிப்ரவரி 28 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
உரிமம் ரத்து செய்யப்படும்: அதற்குள் உத்தரவை பின்பற்றியதற்கான அறிக்கையை சம்பந்தப்பட்ட மண்டல ஆணையர்களிடம் சமர்பிக்க வேண்டும். இந்த உத்தரவை பின்பற்றாமல் மீறும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது, நேம்பிளேட்களில் கன்னட மொழியை பயன்படுத்தாத கடைகளுக்கான் உரிமம் முதலில் சஸ்பெண்ட் செய்யப்படும். தொடர்ந்து மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்தனர்.
கன்னடா தெரியாது என்று சொன்னால்: அண்மையில் சமூக வலைத்தளங்களில் கன்னட ரக்ஷன வேதிகா அமைப்பை சேர்ந்த பெண் ஒருவர் கடைகளை மிரட்டும் வீடியோ ஒன்று வைரலானது. அதாவது, இருபக்கமும் மார்வாடி கடைகள் நிறைந்த குறுகலான சாலை ஒன்றில் ஜீப்பில் நின்ற படி மைக்கில் பேசிக்கொண்டு சென்ற பெண் ஒருவர், இது கர்நாடகா.. கன்னடர்கள்தான் இந்த மாநிலத்தின் பெருமை.
நீங்கள் (மார்வாடி) உங்கள் பெருமையை உங்கள் மாநிலத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த முறை எனக்கு கன்னடா தெரியாது என்று நீங்கள் சொன்னால் நீங்கள் டார்கெட் செய்யப்படுவீர்கள்” என்று எச்சரிக்கும் காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இந்த நிலையில் தான் பெங்களூர் மாநகராட்சி கடைகளின் பெயர் பலைகையில் புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது.
உள்ளூர் மொழியை கற்றுக்கொள்ளாமல்: கர்நாடக முதல்வர் சித்தராமையா கடந்த அக்டோபர் மாதம் கன்னட மொழியை மாநிலத்தில் வசிக்கும் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என பேசிய பிறகு மொழி பிரச்சினை மீண்டும் அதிகரித்தது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சித்தராமையா, பல்வேறு மொழிகளை பேசும் மக்கள் கர்நாடகாவில் செட்டில் ஆகியுள்ளனர். எனவே இந்த மாநிலத்தில் வசிக்கும் அனைவரும் கர்நாடகா கற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ளூர் மொழியை கற்றுக்கொள்ளாமல் இருப்பது சாத்தியம் கிடையாது. ஆனால், கன்னடா பேச தெரியாவிட்டாலும் கூட நீங்கள் கர்நாடகாவில் வாழ முடியும். கன்னட மக்கள் பிறருக்கு நமது மொழியை கற்றுக்கொடுப்பதை விட அவர்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications