Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பதறும் டெல்லி! டிகே சிவகுமார் vs சித்தராமையா! கர்நாடகாவின் அடுத்த முதல்வர் இவர்தான்? இன்றே அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்று இன்று காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் பதவிக்கு அங்கே சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே போட்டி நிலவி வருகிறது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை காங்கிரஸ் கட்சி பதிவு செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.

Siddaramaiah or DK Shivakumar: Karnataka CM will be announced by Congress party today?

அங்கு எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 66 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மஜத மொத்தம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

குழப்பம்: இந்த நிலையில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ள நிலையில் அங்கே யார் முதல்வர் என்ற சந்தேகமும் நிலவி வருகிறது. அதாவது டிகே சிவக்குமார், சித்தராமையா இருவரில் யார் முதல்வர் என்று கேள்வி நிலவி வருகிறது.

டிகே சிவக்குமார் அங்கே காங்கிரஸ் தலைவர், எதிர்காலத்தில் காங்கிரசின் தேசிய தலைவர்களில் ஒருவராக வருவார் என்று கருதப்படும் நபர், அதோடு முன்னாள் அமைச்சர், கடந்த முறை ஜேடிஎஸ் உடன் கூட்டணி ஆட்சி அமைக்க முக்கிய காரணம் டிகே சிவக்குமார்தான்.

அதோடு தொண்டர்கள் பலம் கொண்ட தலைவர். இன்னொரு பக்கம் சித்தராமையா முன்னாள் முதல்வர், எதிர்கட்சித் தலைவர், முன்னாள் அமைச்சர், காங்கிரஸ் கட்சியின் அடையாளம், முகம், நிர்வாகிகள் பொரும்பாலும் இவர் பக்கம்தான், அரசியல் ராஜதந்திரி.

இவர்களில் யார் முதல்வராக போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெரும்பாலான எம்எல்ஏக்கள் சப்போர்ட் சித்தராமையாவிற்கும், தொண்டர்கள் சப்போர்ட் டிகே சிவக்குமாருக்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதல்வர் ஆவதற்கு இரண்டு பேருமே தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றனர். முக்கியமாக டிகே சிவக்குமார் மிக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறாராம்.

இப்போதும் கூட ட்விட்டரில் டிகே சிவக்குமார் பார் சிஎம் #dksivakumar4cm என்ற டேக் வைரலாகி வருகிறது. இதெல்லாம் அவரின் முதல்வர் ஆசையில் இருக்கிறாரோ என்ற கேள்வியை எழுப்பியது.

Siddaramaiah or DK Shivakumar: Karnataka CM will be announced by Congress party today?

இன்று அறிவிப்பு: இந்த நிலையில் கர்நாடகாவிற்கான புதிய முதல்வரை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. அங்கே முதல்வரை தேர்வு செய்யலாம் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவிற்கு முழு அனுமதி கொடுத்துள்ளனர்.

இதையடுத்து எம்எல்ஏக்கள் ஆதரவு அடிப்படையில் முதல்வரை தேர்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய கட்சியின் தலைமை குழு ஆலோசனை செய்தது. கர்நாடக காங்கிரஸ் தேர்தல் பார்வையாளர் குழு சார்பாக இவர்களிடம் கர்நாடக நிலவரம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து எம்எல்ஏக்கள் ஆதரவு யாருக்கு என்று ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் வென்றது சித்தராமையாவா அல்லது டிகே சிவக்குமாரா என்பது ரகசியமாக உள்ளது. இதன் முடிவுகள் நேற்று சோனியா காந்தி - கார்கேவிடம் கொடுக்கப்பட்டது. அவர்கள் இன்று அதில் இறுதி முடிவு எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் டி.கே.சிவக்குமார், கட்சியின் தேசியத் தலைமையிடம் தனது தரப்பை முன்வைப்பதற்காக இன்று டெல்லி செல்கிறார். இன்னொரு பக்கம் முதல்வர் பதவியை எதிர்பார்க்கும் மூத்த தலைவர் சித்தராமையா நேற்று டெல்லிக்கு சென்றார். கட்சி இறுதி அறிவிப்பை வெளியிடும் முன் அங்கே இருக்க வேண்டும் என்று நேற்று டில்லி வந்தார்.

Siddaramaiah or DK Shivakumar: Karnataka CM will be announced by Congress party today?

இன்று அறிவிப்பு: இன்று அங்கு புதிய முதல்வர் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் உள்ளன.

இன்னொரு பக்கம் சித்தராமையாவும் டெல்லியில் முதல்வர் பதவிக்கு காய் நகர்த்தி வருகிறார். இந்த நிலையில் சித்தராமையாதான் முதல்வராக பதவி ஏற்பார் என்று நம்மிடம் கர்நாடக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

டிகே சிவகுமாருக்கு நிர்வாகிகள் ஆதரவு, மக்கள் பிரபலம் இருந்தாலும் எம்எல்ஏக்கள் ஆதரவு தொடங்கி தொண்டர்கள் ஆதரவு எல்லாம் சித்தராமையாவிற்கே இருக்கிறது. இதனால் டிகே சிவகுமாரே முதல்வர் பதவிக்கு திட்டமிடவில்லை என்று கூறப்படுகிறது.

அதனால் சித்தராமையாதான் அடுத்த முதல்வர். இதுபோக கர்நாடகாவில் 3 துணை முதல்வர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

சித்தராமையா முதல்வர். துணை முதல்வர்கள் 3ல் ஒருவர் வொக்கலிகா, ஒருவர் முஸ்லீம், ஒருவர் லிங்காயத்து துணை முதல்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அங்கே வொக்கலிகா இருக்கும் தொகுதிகளில் காங்கிரஸ் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. அவர்களுக்கு 4 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுப்போம் என்று பாஜக சொல்லியதும் டிகே சிவக்குமார் காரணமாக வொக்கலிகா வாக்குகள் காங்கிரசுக்கு வந்துள்ளது.

இதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஒரு துணை முதல்வர் பதவி.. இஸ்லாமியர்கள் 13 சதவிகிதம் பேர் கிட்டத்தட்ட அப்படியே காங்கிரசுக்கு வாக்களித்து உள்ளதாக கருதப்படுகிறது.. அதை மனதில் வைத்து அவர்களுக்கும் ஒரு துணை முதல்வர். இது போக இந்த தேர்தலில் காங்கிரசுக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்த லிங்காயத்து பிரிவினர். அவர்கள் பாரம்பரிய பாஜக என்றாலும் இந்த முறை காங்கிரசுக்கு ஆதரவு அளித்தனர்.

Siddaramaiah or DK Shivakumar: Karnataka CM will be announced by Congress party today?

பேட்டி: முதல்வர் பதவிக்கு போட்டியிடும் டிகே கட்சியின் தேசிய தலைமையிடம் தனது தரப்பு நியாயத்தை முன்வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜக அழுத்தத்தால் சிறை சென்றது, தேர்தல் பணிகளை செய்தது, காங்கிரஸ் வெற்றியை உறுதி செய்தது, பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்காக உதவியது என்று பல விஷயங்களை இன்று அவர் டெல்லி பயணத்தில் சோனியா, ராகுல், கார்கேவிடம் தெரிவிக்க உள்ளாராம்.

இன்னொரு பக்கம் முதல்வர் பதவியை எதிர்பார்க்கும் மூத்த தலைவர் சித்தராமையா, கட்சி இறுதி அறிவிப்பை வெளியிடும் முன் நேற்று டெல்லி வந்து தலைவர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார்.

டெல்லிக்கு செல்வதற்கு முன், சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் முன்னேறியது காங்கிரஸ் கட்சியால். காங்கிரஸால்தான் நான் இன்று இந்த நிலையில் உள்ளேன். கட்சி இல்லாமல் அனைவரும் பூஜ்ஜியம் தான் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+