Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓஹோ..லோக்சபா தேர்தலுக்கு பின் கர்நாடகா காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் பாஜக? ’ஷிண்டே’ பேச்சால் டென்ஷன்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் கர்நாடாகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்துவிடும் என மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உடைக்கப்பட்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணியை உருவாக்கியது பாஜக. ஏக்நாத் ஷிண்டே கோஷ்டியுடன் இணைந்து காங்கிரஸ், என்சிபி, சிவசேனா ஆட்சியைக் கவிழ்த்தது பாஜக. பின்னர் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கி பாஜக கூட்டணி ஆட்சியையும் அமைத்தது. இதே பாணியில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸையும் உடைத்தது பாஜக.

Siddaramaiah slams Maharashtra CM Eknath Shinde on topple of Karnataka govt

இந்த நிலையில் கர்நாடகாவில் மகாராஷ்டிரா பாணியில் காங்கிரஸ் ஆட்சி கவிழப் போவதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருப்பது சர்ச்சையாகவும் வெடித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே, அண்மையில் கர்நாடகாவுக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றேன்; அங்கு லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் கர்நாடகா காங்கிரஸ் அரசு கவிழ்ந்துவிடும் என என்னிடம் தெரிவித்தனர் என்றார்.

இதற்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக சித்தராமையா கூறியிருப்பதாவது: கர்நாடகாவில் என் தலைமையிலான காங்கிரஸ் அரசை ஒருவராலும் ஒரு போதும் கவிழ்த்துவிடவே முடியாது. ஆட்சிக் கவிழும் என்கிற மயக்கத்தில் இருக்கிறது பாஜக. லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் 20 தொகுதிகளில் வெல்லும் என்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு ரூ50 கோடி கொடுத்து ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிக்கிறது என குற்றம்சாட்டி இருந்தார் சித்தராமையா.

இதனிடையே ஏக்நாத் ஷிண்டே கருத்துக்கு கர்நாடகா பாஜகவும் மறுப்பு தெரிவித்துள்ளது. கர்நாடகா மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா கூறுகையில், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜக முயற்சி செய்யாது. பொறுப்பான எதிர்க்கட்சியாக கர்நாடகாவில் பணியாற்றுகிறோம். கர்நாடகா காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பது அப்படி ஒன்றும் எளிதானதும் அல்ல. காங்கிரஸ் அரசு தானாகவே கவிழ்ந்தால்தான் உண்டு. இவ்வாறு விஜயேந்திரா கூறியுள்ளார்.

2023-ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வென்றது. மொத்தம் 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் பெரும்பான்மைக்கு தேவை 113. பாஜக 66 இடங்களிலும் ஜேடிஎஸ் 19 இடங்களிலும் வென்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+