தொடர் தோல்வியில் இருந்து திசைதிருப்பவே பாஜகவின் இந்த ரூ.2000 நோட்டு நாடகம்.. சித்தராமையா பாய்ச்சல்!
பெங்களூர் : 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. நாளை கர்நாடகா முதல்வராகப் பதவியேற்கவுள்ள சித்தராமையா, "பாஜகவின் தோல்விகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே இந்த முயற்சி." என விமர்சித்துள்ளார்.
தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட ஆறரை ஆண்டுகளுக்குப் பிறகு 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுவதாக அறிவித்திருப்பது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கையில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதாவது செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில், அரசின் இந்த முடிவை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. 2016 டிசம்பரில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோதே காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வந்த நிலையில், இன்று 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
கர்நாடகாவில் நாளை முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா இதுகுறித்துக் கூறுகையில், "பாஜகவின் தோல்விகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே இந்த முயற்சி. ரூ.2000 நோட்டை இப்போது நிறுத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது என்றால், 2016ல் ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது?

பிரதமர் மோடியால் மீண்டும் ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்டுள்ளது. தங்கள் கொள்கைகளிலேயே தெளிவில்லாமல் இருக்கும் ஒரே ஆட்சி பாஜக ஆட்சி." என சித்தராமையாக காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் நிதி அமைச்சராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ள சித்தராமையா 13 முறை மாநிலத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர். சித்தராமையா நாளை கர்நாடகா முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications