வருணா ஓகே.. கோலாரும் வேண்டும்.. மீண்டும் 2 தொகுதிகளில் களமிறங்கும் சித்தராமையா? இப்படி ஒரு காரணமா?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக உள்ள சித்தராமையா மைசூர் மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் கடந்த தேர்தலைபோல் 2 தொகுதிகளில் களமிறங்க சித்தராமையா விரும்புகிறார். இதனால் கோலார் தொகுதியையும் தனக்கு ஒதுக்கும்படி அவர் கட்சி மேலிடத்திடம் கேட்டுள்ள நிலையில் பின்னணியில் உள்ள காரணம் வெளியாகி உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியை பிடிக்க விரும்பும் கட்சிகள் 113 இடங்களில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். 2018 ல் தேர்தல் நடந்த நிலையில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது.
5 ஆண்டு ஆட்சி முடியும் தருவாயில் உள்ளதால் இன்னும் 2 மாதத்துக்குள் கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க பாஜக முயற்சித்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ளன. ஆம்ஆத்மி கட்சியும் புதிதாக களமிறங்கி உள்ளது.

கோலாரை கைவிட்ட சித்தராமையா
இந்நிலையில் தான் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக சித்தராமையா உள்ளார். கடந்த 2013 முதல் 2018 வரை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் முதல்வராக இருந்த இவர் தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். இவர் தற்போது பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதி எம்எல்ஏவாக உள்ள நிலையில் வரும் தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் கோலார் தொகுதிகளில் கட்சி தலைவர்கள் இடையேயான கருத்து வேறுபாட்டால் சித்தராமையாவின் வெற்றி எளிதாக இருக்காது என்பது தெரியவந்து.

வருணாவில் சித்தராமையா போட்டி
இதனால் சித்தராமையாவின் சொந்த தொகுதியான வருணாவில் போட்டியிடும்படி காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல்காந்தி ஆகியோர் அறிவுறுத்தினர். இதற்கு சித்தராமையா ஒப்புக்கொண்டார். இந்நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் வருணா தொகுதியில் சித்தராமையா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் கோலார் தொகுதியில் போட்டியிடுவதில் இருந்து சித்தராமையா பின்வாங்கியதாக தகவல்கள் வெளியாகின.

2 தொகுதிகளில் போட்டியிட ஆர்வம்
இந்நிலையில் தான் சித்தராமையா கோலார் தொகுதியிலும் போட்டியிட ஆர்வமாக உள்ளார். இதனை சித்தராமையாவே உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛நான் கோலார் மற்றும் மைசூர் மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிட கட்சி மேலிடத்திடம் விருப்பம் தெரிவித்து இருந்தேன். முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் வருணாவில் போட்டியிட கட்சி அனுமதி அளித்துள்ளது. கோலார் தொகுதியில் போட்டியிடவும் சீட் கொடுக்கும்படி கேட்டுள்ளேன். இந்த விவகாரத்தில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானது'' என்றார். இதன்மூலம் சித்தராமையா வருணா மற்றும் கோலார் தொகுதிகளில் களமிறங்க திட்டமிட்டு இருப்பது உறுதியாகி உள்ளது.

காரணம் என்ன?
அதாவது கடந்த 2018 தேர்தலில் சித்தராமையா தனது சொந்த தொகுதியான வருணாவை தனது மகன் யதீந்திராவுக்கு விட்டு கொடுத்துவிட்டு மைசூர் மாவட்டம் சாமுண்டேஸ்வரி தொகுதியிலும், பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியில் போட்டியிட்டார். இதில் சாமுண்டேஸ்வரி தொகுதியில் அவர் தோற்ற நிலையில் பாதாமியில் வெற்றி பெற்றார். அதேவேளையில் வருணாவில் போட்டியிட்ட அவரது மகன் யதீந்திரா வெற்றி பெற்று முதல் முறையாக எம்எல்ஏ ஆனார். இந்நிலையில் தான் வரும் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் சித்தராமையா தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும். இதனால் தந்தை சித்தராமையாவுக்காக யதீந்திரா தனது வருணா தொகுதியை விட்டு கொடுத்துள்ளார். இந்த தொகுதியில் சித்தராமையா எளிதாக ஜெயிக்க வாய்ப்புள்ளது. அதேவேளையில் யதீந்திரா தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மகனுக்கு வாய்ப்பு வழங்கும் சித்தாராமையா?
இந்நிலையில் தான் சித்தராமையா வருணா தொகுதியுடன் கோலாரிலும் போட்டியிட விரும்புகிறார். இதில் 2 தொகுதிகளிலும் சித்தராமையாக வெற்றி பெற்றால் அதன்பிறகு கோலார் எம்எல்ஏவாக இருந்துவிட்டு வருணா தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்யலாம். அதைத்தொடர்ந்து வருணாவில் அவரது மகன் யதீந்திராவை களமிறக்கி மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கி அரசியலில் ஜொலிக்க வைக்க சித்தராமையா முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications