கர்நாடகா முதல்வராக சித்தராமையா? டிகே சிவக்குமாருக்கு புதிய பதவி! அமைச்சரவை உத்தேச லிஸ்ட் இதுதான்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் முதல்வராக சித்தராமையா நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் டிகே சிவக்குமாருக்கு புதிய பொறுப்பும் வழங்கப்படுவதாகவும், அமைச்சர்களின் உத்தேச பட்டியலும் வெளியாகி உள்ளது. இதில் பெங்களூர் தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படுகிறது.
கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கு கடந்த 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்தது. காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியையும் பெற்றது.

கர்நாடகாவில் 113 இடங்களில் வென்றால் ஒரு கட்சியால் தனித்து ஆட்சியை பிடிக்க முடியும். ஆனால் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 66 இடங்களிலும், ஜேடிஎஸ் கட்சி 19 இடங்களில் வெற்றி பெற்றது. மற்றவர்கள் 4 தொகுதிகளில் வென்றனர்.
இதன்மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி என்பது உறுதியாகிவிட்டது. முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். இதில் சித்தராமயைாவுக்கு தான் முதல்வர் பதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தான் கர்நாடகா அமைச்சரவை எப்படி அமையும் என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி காங்கிரஸ் சார்பில் முதல்வராக சித்தராமையா நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. டிகே சிவக்குமாருக்கு துணை முதல்வர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேபோல் அமைச்சரவையில் ஹரிபிரசாத் (எம்எல்சி) , கேஎச் முனியப்பா (தேவஹள்ளி தொகுதி), ஆர்வி தேஷ்பாண்டே (ஹலியால்), யுடி காதர் (மங்களூர் தொகுதி), எம்பி பாட்டீல் (பபலேஷ்வர் தொகுதி) ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம்.
மேலும் ராமலிங்க ரெட்டி (பெங்களூர் பிடிஎம் லே-அவுட்), கிருஷ்ணபைரேகவுடா (பேடராயனகவுடா), கேஜே ஜார்ஜ் (பெங்களூர் சர்வக்ஞநகர்), எச் சி மகாதேவப்பா (மைசூர் மாவட்டம் டி நரசிப்புரா தொகுதி), லட்சுமண் சவதி (பெலகாவி மாவட்டம் அதானி தொகுதி) ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இவர்கள் தவிர சிவலிங்கே கவுடா (ஹாசன் மாவட்டம் அரிசிகெரே), செலுவராயசாமி (மண்டியா மாவட்டம் நாகமங்களா), பரமேஸ்வர் (துமகூரு கொரட்டகெரே தொகுதி), பிரியங்க் கார்கே (-மல்லிகார்ஜூன கார்கே மகன் - கலபுரகி, சித்தாபுரா), சதீஷ் ஜார்கிகோளி (பெலகாவி எமகனமரடி), எச்கே பட்டீல் (கதக்), லட்சுமி ஹெப்பால்கர் (பெலகாவி புறநகர்), எச் ஒய் மேட்டி (பாகல்கோட்டை தொகுதி), அப்பய்யா பிரசாத் (உப்பள்ளி தார்வார் கிழக்கு) ஆகியோரும் அமைச்சராக வாய்ப்புள்ளது.
அதோடு நாகேந்திரா (பல்லாரி புறநகர்), எஸ்எஸ் மல்லிகார்ஜூன் (தாவணகொரே வடக்கு), கொத்தூரு மஞ்சுநாத் (கோலார் தொகுதி), ஆர்வி திம்மாப்பூர் (முதோல்), ஈஸ்வர் காண்ட்ரே (பீதர் மாவட்டம் பால்கி), தினேஷ் குண்டுராவ் (பெங்களூர் காந்திநகர்), தன்வீர் சேட் (மைசூர் நரசிம்மாரஜா), அஜய் சிங் (கலபுரகி மாவட்டம் ஜீவர்கி), புட்டரங்க செட்டி (சாம்ராஜ் நகர்), ஜமீர் அகமது கான் (பெங்களூர் சாம்ராஜ்பேட்டை தொகுதி) ஆகியோருக்கு அமைச்சராக அதிர்ஷ்டம் அடிக்கலாம் என கூறப்படுகிறது.
இருப்பினும் இதுபற்றிய இறுதி முடிவு என்பது காங்கிரஸ் மேலிடத்தின் கையில் தான் உள்ளது. காங்கிரஸ் மேலிடம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
******
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications