பிடியை இறுக்கும் நீதிமன்றம்! விசாரணை உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய சித்தராமையா திட்டம்
பெங்களூர்: முடா முறைகேடு புகாரில், கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இது அம்மாநில அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக முதல்வர் தரப்பு தெரிவித்திருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் சமீப காலமாக அரசியல் சலசலப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. சில நாட்களுக்கு முன்னர் வால்மீகி வாரிய நிதி முறைகேடுகளால் அமைச்சர் நாகேந்திரா பதவி இழந்திருந்தார். இப்போது 'முடா' முறைகேடு வழக்கு கர்நாடக காங்கிரஸ் ஆட்சியை குடைய தொடங்கியுள்ளது.

அதாவது மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் மூலம், சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டுமனைகள் முறைகேடாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தன்னுடைய மனைவிக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்ததற்கு இழப்பீடாகவே இந்த மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன, என்று சித்தராமையா விளக்கமளித்துள்ளார்.
இந்த விளக்கத்தை ஏற்காத எதிர்க்கட்சிகள், முறைகேடு காரணமாக சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. சட்டசபை, மேல்சபை கூட்டத்திலும் இந்த விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
'முடா' குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக தொடர்ந்து அம்மாநில ஆளுநரிடம் வலியுறுத்தி வந்தது. இதனையடுத்து இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதியளித்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் சித்தராமையா மீது வழக்கு தொடர அம்மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அனுமதி வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
சித்தராமையா மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அம்மாநில காங்கிரஸ், ஆட்சியை கவிழ்க்க ஆளுநர் மூலம் சதி செய்யப்படுவதாக விமர்சித்திருக்கிறது. மறுபுறம் சித்தராமையா தரப்பு உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தது.
முடா விவகாரத்தில் தன் மீது விசாரணை நடத்த ஆளுநர் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று, ஆக.19ம் தேதி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா தரப்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. சித்தராமையாவு ஆதரவாக மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, ரவிவர்மா குமார் ஆகியோர் வாதாட, ஆளுநருக்காக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாநில அரசுக்காக அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி ஆகியோர் வாதாடியிருந்தனர்.
இதற்கிடையில், முதல்வர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி, ஸ்நேமயி கிருஷ்ணா, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், இது தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், தீர்ப்பு வரட்டும் என்று கூறி, சிறப்பு நீதிமன்றம் விசாரணையை நிறுத்தி வைத்திருந்தது.
மறுபுறம் உயர்நீதிமன்றத்தில் வழக்கின் மீதான விசாரணை கடந்த 12ம் தேதி முடிந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் தீர்ப்பு வெளியாகியிருந்த நிலையில், சித்தராமையா மீதான விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாக கூறிவிட்டது. இதனால், இந்த வழக்கின் பிடி இறுக தொடங்கியுள்ளது.
வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் கொடுத்த நிலையில், சிறப்பு நீதிமன்றமும் இது குறித்து வழக்கு பதிவு செய்ய அனுமதி கொடுத்திருக்கிறது. இந்த வழக்கை மைசூர் லோக் ஆயுக்தா போலீஸ் விசாரணை செய்ய வேண்டும் என்றும், விசாரணையை 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்றங்களின் அடுத்தடுத்த உத்தரவுகளால் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ள சித்தராமையா, மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்கிவி உள்ளிட்டோரிடம் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய சித்தராமையா தரப்பு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications