300 ஆபாச வீடியோ.. பிரஜ்வல் எம்பி நாட்டை விட்டு ஓட்டம்- "சித்தப்பா" குமாரசாமி சொன்னது என்ன தெரியுமா?
பெங்களூர்: 300 பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோக்கள் வெளியாகி இந்தியாவை விட்டு தப்பி ஓடிய பாஜக கூட்டணி வேட்பாளரும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமாகிய பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு விசாரணைக் குழு இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என அவரது சித்தப்பாவும் கர்நாடகா முன்னாள் முதல்வருமான குமாரசாமி தெரிவித்துள்ளார்.
தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணாவின் மகன்- தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. ஹாசன் தொகுதி சிட்டிங் எம்பி. தற்போதைய தேர்தலில் பாஜக கூட்டணியின் ஜேடிஎஸ் கட்சி வேட்பாளராக ஹாசனில் மீண்டும் போட்டியிட்டுள்ளார் பிரஜ்வல் ரேவண்ணா. கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியின் அண்ணன் மகன் பிரஜ்வல்.

ஹாசன் தொகுதியில் ஏப்ரல் 26-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்னதாக ஹாசன் தொகுதி முழுவதும் பிரஜ்வல் ரேவண்ணாவின் 300க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் காட்டுத் தீயாக பரவி பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து இந்த வீடியோ விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரியது கர்நாடகா மகளிர் ஆணையம். இதனடிப்படையில் எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் சித்தராமையா.
அதேநேரத்தில் ஆபாச வீடியோவில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா, இந்தியாவை விட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியதாவது: ஹாசன் வீடியோக்கள், தேர்தலின் போதே வெளியாகின. தற்போது எஸ்.ஐ.டி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையின் முடிவில் உண்மைகள் வெளியே வரும். யார் தவறு செய்திருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். யார் தவறு செய்திருந்தாலும் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆகையால் உண்மை என்ன என்பது தெரிய வந்ததும் என் கருத்துகளைத் தெரிவிக்கிறேன்.
எங்கள் குடும்பத்தில் நானோ தேவகவுடாவோ பெண்களை மரியாதையாகத்தான் நடத்துவோம். பாதிக்கப்பட்ட நிலையில் வரும் பெண்களுக்கு நாங்கள் ஆதரவாகவும் கரிசனத்தையும்தான் காட்டி இருக்கிறோம். அத்தகைய பெண்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணத்தான் முயற்சித்திருக்கிறோம்.
பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார் என கூறப்படுவது என்னுடன் தொடர்புடையது அல்ல. எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதிகாரிகள் தங்களது பணியை செய்வார்கள். பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு ஓடிப் போயிருந்தால் அவரை திரும்ப அழைத்து வருவது அதிகாரிகளின் பொறுப்பும் கடமையுமாகும். என்னைக் கேட்டால் பிரஜ்வலை இந்தியாவுக்கு அழைத்துதான் வரவேண்டும் என்பேன். கவலைப்பட வேண்டாம். இவ்வாறு குமாரசாமி கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications