தமிழ்நாட்டில் இருந்து வந்து.. கர்நாடகாவில் குண்டு வைத்துள்ளனர்.. பாஜக அமைச்சர் பரபரப்பு பேச்சு
பெங்களூர்: தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வந்து எங்கள் (கர்நாடகா) ஓட்டலில் வெடிகுண்டுகளை வைக்கிறார்கள் என்று கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல உணவகம் ராமேஸ்வரம் கஃபே. இந்த உணவகத்தின் ஒயிட் லீட் கிளையானது 80 அடி சாலையில் அமைந்திருக்கிறது. இந்த கஃபேயானது இரண்டு நாட்களுக்கு முன் வழக்கம் போல் செயல்பட்டு வந்தது. அப்போது மதிய நேரத்தில் கஃபேயில் இருந்து மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதில் உணவகத்தில் இருந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.

இது பெரிய அளவிலான குண்டுவெடிப்பு அல்ல, இது ஒரு தற்செயலான வெடிகுண்டு. இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்துள்ளன, இது நடக்கக்கூடாது. அது என்னவென்று பார்ப்போம். சமீப காலங்களில், இதுபோன்ற குண்டுவெடிப்புகள் குறைந்து இருந்தது. தற்போது மீண்டும் நடந்துள்ளது. . பாஜக ஆட்சியின் போது மங்களூரு பகுதியில் இப்படி நடந்தது. எங்கள் ஆட்சியின் போது இது போன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என்று சித்தராமையா கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
விசாரணை; ராமேஸ்வரம் கஃபேவின் என்ன நடந்தது என்பது தொடர்பான விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது. இது தொடர்பாக என்ஐஏ புதிய விசாரணைகள் சிலவற்றை கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் மண்ணடியில் ஒரு இடத்திலும், ராமநாதபுரத்தில் 4 இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதன்படி தமிழ்நாட்டில் ஏற்கனவே என்டிஏ இன்பார்மர்கள் கொடுக்கும் தகவலின்படி அடிக்கடி ரெய்டு நடப்பது வழக்கம். பொதுவாக ஒரு குண்டு வெடித்தால் அதன் ஸ்டைலை வைத்து எந்த பகுதி தீவிரவாத குழு இதை செய்தது என்று என்ஐஏ கணிக்கும். அதை அடிப்படியாக வைத்தே இந்த ரெய்டுகளை இப்போது என்ஐஏ செய்கிறதாம்.
முக்கியமாக இன்பார்மர்கள் கொடுத்த சில தகவலின்படி என்ஐஏ மண்ணடியில் ஒரு இடத்திலும், ராமநாதபுரத்தில் 4 இடங்களிலும் சோதனை செய்தனர்.
சர்ச்சை பேச்சு: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வந்து எங்கள் (கர்நாடகா) ஓட்டலில் வெடிகுண்டுகளை வைக்கிறார்கள் என்று கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பெங்களூரில் பேசிய அவர், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வந்து எங்கள் (கர்நாடகா) ஓட்டலில் வெடிகுண்டுகளை வைக்கிறார்கள். எங்கள் மாநிலம் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அவர்கள் மீது கர்நாடகா மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
இன்னும் சிலர் வேறு இடங்களில் இருந்து வந்து "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என்று கோஷம் போடுகிறார்கள். அவர்களை தடுப்பது இல்லை. மேலும் மாணவர்கள் மீது சிலர் ஆசிட் வீசுகிறார்கள், அப்படி சர்ச்சைக்குரிய விஷயங்களை செய்யபவர்கள் மீது கர்நாடகா மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" , என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.
இவர் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, உணவு பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சர் ஆகிய துறைகளின் மத்திய இணை அமைச்சராக ஷோபா கரந்த்லாஜே பதவி வகித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications