கடைசி நேரத்தில் பிரச்சனை.. SpaDeX ஒருங்கிணைப்பு பணி மீண்டும் நாளைக்கு ஒத்திவைப்பு.. இஸ்ரோ தகவல்
பெங்களூர்: விண்வெளியில் நம் நாடு சார்பில் விண்வெளி மையம் அமைக்கும் வகையில் இஸ்ரோ சார்பில் ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்வெளியில் செலுத்தப்பட்டுள்ள 2 செயற்கைகோள்களை ஒருங்கிணைக்கும் பணி இன்று நடந்தது. அப்போது கடைசி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் இந்த பணி நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு, செயற்கைகோள்கள் பாதுகாப்பாக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயற்கைக்கோள்கள் இணைப்பு பரிசோதனையை 9-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைக்கோள்களை விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பி...

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இஸ்ரோ சார்பில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைக்கோள்களை விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்திய விண்வெளி துறையில் புதிய மைல்கல்லாக விண்வெளியில் நம் நாட்டுக்கு என்று தனியாக விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான தொடக்க பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
2035ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நம் நாட்டுக்கு என்று தனியாக விண்வெளிய மையம் அமைத்து விட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்தின் ஒருபகுதியாக கடந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் 30ம் தேதி பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டில் 'ஸ்பேடெக்ஸ்' திட்டத்தின் கீழ் 2 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.
இந்த 2 செயற்கைகோள்களும் தற்போது தனியாக இயங்கி வருகின்றன. இதனை ஒன்றாக இணைக்கும் பணியை இஸ்ரோ கடந்த 7 ம் தேதி செய்வதாக இருந்தது. ஆனால் திடீரென்று அந்த பணி ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று இஸ்ரோ சார்பில் இரு செயற்கைகோள்களையும் ஒன்றிணைக்கும் பணி தொடங்கியது. அப்போது இரு செயற்கைகோள்களுக்கு இடையேயான தூரத்தை 225 மீட்டராக குறைக்கப்பட்ட நிலையில் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து இரு செயற்கைகோள்களையும் ஒன்றிணைக்கும் பணி தள்ளிவைக்கப்பட்டது.
இதனை இஸ்ரோ உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛இரு செயற்கைகோள்கள் இடையேயான தூரம் 225 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. இரு செயற்கைகோள்களையும் இணைக்கும் பணி நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது செயற்கைகோள்கள் பாதுகாப்பாக உள்ளன'' என்று கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications