மத மோதலை உருவாக்கும் பாஜக உடன் கூட்டணியா? எதிர்க்கும் மஜத துணைத் தலைவர்.. கட்சிக்கு முழுக்கு
பெங்களூர்: பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மதச் சார்பற்ற ஜனதா தளம் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் துணைத் தலைவர் சையத் சஃபிபுல்லா சாகேப் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது மதச் சார்பற்ற ஜனதா தளம். இதனையடுத்து கட்சியைத் தக்க வைக்க காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் சேர வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு ஏற்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளத்தை அரவணைக்க தயாராக இல்லை.

இதனால் வேறுவழியே இல்லாமல் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சி இணைந்தது. டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பாஜக கூட்டணியில் இணைந்தார் குமாரசாமி.
ஆனால் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் பாஜகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. சில எம்.எல்.ஏக்கள் காங்கிரஸுக்கு தாவ உள்ளதாகவும் கூறப்பட்டது. இதனை குமாரசாமி திட்டவட்டமாக மறுத்தும் இருந்தார்.
மேலும் காங்கிரஸ் கட்சிதான் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏக்களை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இந்த முயற்சி நடைபெற்று வருகிறது. ஒரு எம்.எல்.ஏ. கூட எங்கள் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸுக்கு போகவே மாட்டார்கள் என்றும் குமாரசாமி நம்பிக்கையோடு கூறியிருந்தார்.
இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் துணைத் தலைவர் சையத் சஃபிபுல்லா சாகேப் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக சையத் சஃபிபுல்லா சாகேப் கூறியதாவது: மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் 30 ஆண்டுகளாக பயணித்தேன். மதச்சார்பின்மையைத்தான் கட்சி இதுவரை முன்னிறுத்தியது. வாக்காளர்களிடமும் மதச்சார்பின்மை என்ற அடையாளத்தைத்தான் காட்டினோம். ஆனால் இப்போது ஜாதிகளிடையே, மதங்களிடையே மோதல்களை உருவாக்கும் சக்திகளுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கைகோர்த்துவிட்டது. மதத்தின் அடிப்படையில் செயல்படக் கூடிய கட்சியுடனான கூட்டணியை எப்படி ஏற்க முடியும? ஆகையால்தான் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகுகிறேன். இவ்வாறு சையத் சஃபிபுல்லா சாகேப் கூறியுள்ளார்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications