பெங்களூருவால் மறக்க முடியாத சுபா சங்கரநாராயணன்.. 2003ம் ஆண்டு ஏர்போர்ட்டில் நடந்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூருவில் கடந்த 2003ம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பான ஒரு வழக்கு அன்றைக்கு மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இப்படியும் கூட படித்த ஒரு இளம் பெண் செயல்படுவாரா, தனக்கு பிடிக்காதவரை திருமணம் செய்யக்கூடாது என்பதற்காகவும், தனது காதலனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காவும் செய்த செயல் இன்றும் பேசுபொருளாக இருக்கிறது.

நெட்டிசன் ஒருவர் சுபா சங்கரநாராயணன் வழக்கு குறித்து விவரித்துள்ளார். அவரது பதிவினை அப்படியே பார்ப்போம்.

Subha Sankaranarayanan a name Bengaluru cannot forget 2003 case

இந்த புகைப்படத்தில இருப்பவர் பெயர் சுபா சங்கரநாராயணன். 2003ம் ஆண்டு சுபா சங்கரநாராயணனுக்கு 21 வயது. பெங்களூருவில் சட்டம் படித்துக் கொண்டிருந்தார். அவருக்கும், கல்லூரியில் அவரைவிட ஒரு வயது இளையவரான 19 வயது அருண் வர்மாவுக்கும் காதல் இருந்தது. ஆனால் சுபாவின் தந்தைக்கு இந்தக் காதலில் துளியும் விருப்பமில்லை. அவர் மகளின் விருப்பத்தை மீறி, வேறு ஒருவருடன் சுபாவுக்குத் திருமணம் நிச்சயம் செய்ய முடிவு செய்தார்.

2003ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி, 27 வயதான சாப்ட்வேர் என்ஜினியரான பி.வி. கிரிஷ் என்பவருடன் சுபாவுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கிரிஷின் குடும்பத்தினர் திருமண நிச்சயதார்த்தத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாடினர். அவரது எதிர்கால வாழ்க்கை குறித்த எதிர்பார்ப்புகள் நிறைந்திருந்தன.

ஆனால், மூன்றே நாட்களில் அந்த மகிழ்ச்சி சோகமாக மாறியிருந்தது.

டிசம்பர் 3-ம் தேதி, சுபா கிரிஷைத் தொலைபேசியில் அழைத்தார். திருமணத்துக்கு முன்பு இருவரும் சிறிது நேரம் ஒன்றாக பேசலாம என்று கூறினார். இரவு உணவுக்குச் சென்றுவிட்டு, பின்னர் எச்ஏஎல் விமான நிலையம் அருகே உள்ள இன்னர் ரிங் ரோட்டில் விமானங்கள் புறப்படுவதைப் பார்க்கலாம் என்றும் யோசனை தெரிவித்தார். கிரிஷும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

இருவரும் விமானங்கள் செல்லும் ரன்வேக்களையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தனர். பின்னால் இருந்து வந்த மூன்று பேர் பைக்கில் வந்துள்ளனர். பயங்கர ஆயுதங்களை கொண்டு கிரிஷைத் தாக்கினர். சுபா அருகிலேயே நின்று கொண்டு, தாக்குதலை நிறுத்துமாறு கூச்சலிட்டார். தாக்குதலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தது போலவும் நடித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் கிரிஷுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மறுநாள் காலையில் உயிரிழந்தார். கிரிஷின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆரம்பத்தில் போலீசாருக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. கிரிஷுக்கு எதிரிகள் யாரும் இல்லை என்பதால், அவரைக் கொலை செய்திருக்கக்கூடிய காரணமும் தெரியவில்லை. சில நாட்களுக்கு முன்புதான் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்ததால், சுபா மீதும் போலீசாருக்கு முதலில் சந்தேகம் ஏற்படவே இல்லை.

பின்னர், நிச்சயதார்த்த நிகழ்ச்சியின் வீடியோவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சுபா மகிழ்ச்சியில்லாமல், ஆர்வமற்ற நிலையில் உம்முன்னு இருந்தது தெரியவந்தது. நிச்சயதார்த்தம் செய்துகொண்ட பெண்ணின் முகத்தில் இருக்க வேண்டிய மகிழ்ச்சி மற்றும் ஆர்பரிப்பு அவரிடம் இல்லை. இதையடுத்து போலீசார் சுபா சங்கரநாராயணனிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

கொலை நடந்த நாளில் சுபா, தனது காதலன் அருண் வர்மாவுடன் 73 முறை தொலைபேசியில் பேசியிருப்பதும், இருவருக்கும் இடையே ஏராளமான எஸ்எம்எஸ் பரிமாறப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த ஆதாரங்களைக் காட்டி போலீசார் விசாரித்தபோது, சுபா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

நிச்சயதார்த்தம் நடைபெறுவதற்கு முன்பே கிரிஷைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. அருண் வர்மாவுடன் சேர்ந்து வாழ விரும்பிய சுபா, அதற்குத் தடையாக இருந்த கிரிஷைக் கொலை செய்யத் திட்டமிட்டார். இதற்காக சுபா, அருண் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த இருவர் என நான்கு பேரும் சேர்ந்து கொலைத் திட்டத்தைத் தீட்டினர்.

நிச்சயதார்த்தம் முடிந்து வெறும் மூன்று நாட்களே ஆன நிலையில் கிரிஷ் கொலை செய்யப்பட்டார். 2010ம் ஆண்டு ஜூலை மாதம், இந்த வழக்கில் நான்கு பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கர்நாடக உயர் நீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது. 2025-ம் ஆண்டு உச்ச நீதிமன்றமும் நான்கு பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறுகையில், "சுபா தனது தனிப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காணத் துயரமான, ஏற்றுக்கொள்ள முடியாத வழியைத் தேர்ந்தெடுத்தார். இதன் விளைவாக ஓர் இளம் அப்பாவி உயிர் பறிபோனது." என்று கூறியது. தனது வருங்கால மனைவியுடன் விமானங்கள் புறப்படுவதைப் பார்க்கச் சென்றார் கிரிஷ். ஆனால், அவர் அதனபிறகு வீடு திரும்பவில்லை.

இந்த வழக்கில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியது 2003-ம் ஆண்டிலேயே போலீசார் பயன்படுத்திய கால் டீடெயில் ரெக்கார்ட்ஸ் ( CDR) எனப்படும் தொலைபேசி அழைப்பு விவரங்கள் தான். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் குற்ற விசாரணைகளில் இந்தத் தொழில்நுட்பம் மிகவும் புதியதாக இருந்தது. கொலை நடந்த ஒரே நாளில் சுபாவுக்கும் அருண் வர்மாவுக்கும் இடையே நடைபெற்ற 73 தொலைபேசி அழைப்புகள்தான் இந்த வழக்கின் மர்மத்தை உடைக்க முக்கியக் காரணமாக அமைந்தது" இவ்வாறு நெட்டிசன் அந்த கொலை வழக்கு குறித்து பகிர்ந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+